லட்சம் லட்சமாக சுருட்டல்.. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஷாக் : நடவடிக்கை பாயுமா?

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2025, 6:17 pm

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர் .

இந்நிலையில் கடந்த  2024 அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் கோவில் உள்ள தகவல் மையத்தில் பணிபுரியும் பணியாட்கள் மற்றும் அதிகாரிகளும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்தக்கூடிய காணிக்கை , மற்றும் அன்னதான நன்கொடைகள் ஆகியவைகளில் முறைகேடு நடைபெற்றதாகவும், கோவில் பணியாளர்கள் முறையாக ரசீதுகள் கணக்கு வழக்குகள் வழங்குவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

பக்தர்கள் செலுத்தப்படும் அன்னதானம் துலாபாரம், ஆடு, மாடு, கோழி காணிக்கை அரிசி, வெல்லம், சர்க்கரை, இன்னும் காணிக்கையாக செலுத்தும் ஒரு சில பொருட்கள் ஆகியவைகளில் முறைகேடு நடந்திருப்பதாக அவற்றில் லட்சக்கணக்கில் கையாடல் நடந்திருப்பதாகவும் இத்தகைய கையாடலில் கோயில் பணியாளர்கள், மற்றும் அதிகாரிகள் ஆகியோர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரம் கோயில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்யும் வகையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் ,இவர் அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார்.

செல்வராஜுக்கு திருமணம் நடைபெற்றால் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்து அன்னதானம் செய்வதாக வேண்டுதல் இருந்து வந்ததாக கூறினார்.

அவ்வாறு வருகை தந்த செல்வராஜ் கடந்த 24/11/2024 அன்று கோவிலில் உள்ள தகவல் மையத்தில் மதியம் 12.14 மணி அளவில் அன்னதானத்திற்காக  5001ரூபாய் பணம் கட்டியுள்ளார்.

Samayapuram Temple Scam

அப்போது தகவல் மையத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் பிரிண்டிங் மெஷின் ஒர்க் ஆகவில்லை நீங்கள் சாமியை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள் நான் பில் ரசீது தருகிறேன் என தகவல் மையத்தில் பணிபுரியும் நபர் கூறியுள்ளார்.

செல்வராஜ் தனது குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும்  தகவல் மையத்தில் ரசீதை கேட்டுள்ளார் அப்போது அங்குள்ள பணியாளர் உங்களுக்கு பிரிண்டிங் மிஷின் பழுதாகிவிட்டது தங்கள் வாட்ஸ் அப் நம்பருக்கு ரசிதை அனுப்பி வைக்கிறோம் என கூறியுள்ளார்.

செல்வராஜ் நான் காத்திருந்து ரசீதை பெற்றுக் கொள்கிறேன் எனக் கூறிய பின்பு தகவல் மையத்தில் பணிபுரியும் நபர் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்து போலியான ரசீது கொடுத்துள்ளார்.

இச்சம்பவம் கோவில் பணியாளர் ஒருவருக்கு தெரிய வரவே இது தொடர்பாக கோவில் இணை ஆணையர் தகவல் மையத்தில் உள்ள கம்ப்யூட்டரை ஆய்வு செய்துள்ளார்.

அப்போது போலியாக ரசீது தயாரித்து பக்தர்கள் அன்னதானத்திற்கு பணம் கட்டிய நபர்களுக்கு போலியான ரசீது வழங்கியது உண்மை என தெரியவந்தது.

Scam

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

மேலும் கோவில் இணை ஆணையர் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்த பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியத்தோடு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: கன்னத்தில் அறை வாங்கியவர் உயிரிழந்த சோகம்… பரபரப்பு சிசிடிவி காட்சி!

இதே போல் கட்டண தரிசன முறையிலும் கடந்த வாரம் ஆந்திராவைச் சேர்ந்த பக்தர்கள் முப்பது பேர் வந்துள்ளனர் 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் வந்தவர்களிடம் பேரம் பேசி தரிசன கட்டணத்தில் பணியாற்றும் சுதாகர், ஈஸ்வரன் ஸ்ரீரங்கம் திமுக அரசியல் பிரமுகரின் தம்பி ஸ்ரீதர் பெண் காவலாளி சைலஜா ஆகியோர் கூட்டாக இணைந்து அவர்களை சுவாமி தரிசனம் செய்ய வைத்து மாட்டிக்கொண்ட நபர்கள் மீதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

Smayapuyram

சமயபுரம் மாரியம்மன் கோவில் பணியாளர்களின் முறைகேடுகள் தொடர்ந்து புகார் எழுந்து வரும் நிலையில் கோவில் அறங்காவலர் குழு விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என  எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறங்காவலர் குழு இதனை கண்டும் காணாமல் ஊழலுக்கு துணை போவதாகவும் சில பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Scam in Samayapuram Temple Annathanam Scheme Issuance of donation receipt

மேலும் அன்னதானத் திட்டத்தில் அன்னதான கூடத்தில் அம்மனின் அருட் பிரசாதம் என உணவருந்த வரும் பக்தர்களிடம் அங்குள்ள பணியாளர்கள் அவமரியாதையாக நடப்பதாகவும் பல புகார்கள் எழுந்து வருகிறது சமயபுரம் திருக்கோவிலில் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில் உடனடியாக இந்து சமய அறநிலை துறையும் மாவட்ட நிர்வாகமும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 80

    0

    0

    Leave a Reply