வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் ரூபாய் மோசடி : மக்கள் பணத்தை ஏப்பம் விட்ட கேடிகளை சுற்றி வளைத்தது போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2023, 8:37 pm

கோவை சாய்பாபா காலனி பகுதியில் மெரிட் இன்ஃப்ரா private லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் விஜயகுமார். இதே நிறுவனத்தின் சி.இ.ஓ ஜோயல் எமர்சன் ஆகியோர் இந்த நிறுவனத்தின் மூலம் கோவை பெரியநாயக்கன்பாளையம், அப்பநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடு மனை இடம் விற்பனைக்கு இருப்பதாகவும் அதில் வீடு கட்டி விற்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டனர்.

இதனை நம்பி கடந்த 2019 ஆம் ஆண்டில் வீட்டுமனை மற்றும் வீடு வாங்குவதற்காக பணத்தை பொதுமக்கள் கொடுத்துள்ளனர். அதில் வீட்டுமனையை கிரையம் செய்ய 10 சதவீத தொகை அட்வான்ஸ் முதலில் தர வேண்டும் எனவும் கிரயத்தின் போது மீதமுள்ள பணத்தை தர வேண்டும் என்ற நிபந்தையுடன் ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர்.

இதில் 26 பேரிடம் கிட்டத்தட்ட 90 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெற்று கொண்ட விஜயகுமார்,பணத்தை கொடுத்தவர்கள் நான்கு முறை பத்திரப்பதிவுக்கு சென்றபோது இடத்தின் உரிமையாளர் வரவில்லை, பங்குதாரர் வரவில்லை என காரணம் கூறி காலத்தை கடத்தி வந்துள்ளார்.

மேலும் பலரிடம் முழுதொகையையும் பெற்றுகொண்டு வீட்டை பாதிவரை கட்டி, மீதமுள்ள பணிகளை கிடப்பில் போட்டதாக பாதிக்கப்பட்டவர்கள், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் விஜயகுமாரை இன்று அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். 26 பேரில் சிலருக்கு பணத்தை கொடுத்ததாக கூறப்படும் நிலையில் 16 பேரிடம் 78 லட்சம் ரூபாய் மோசடி செய்த்தாக, விஜயகுமார் மற்றும் ஜோயல் எமர்சன், திருச்சியை சேர்ந்த கிளமெண்ட் பெர்னா போஸ் ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள கோவை மாநகர குற்றபிரிவு போலீசார் விஜயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருவர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 609

    1

    0