Categories: தமிழகம்

வீடு கட்டி தருவதாக ரூ.78 லட்சம் ரூபாய் மோசடி : மக்கள் பணத்தை ஏப்பம் விட்ட கேடிகளை சுற்றி வளைத்தது போலீஸ்!!

கோவை சாய்பாபா காலனி பகுதியில் மெரிட் இன்ஃப்ரா private லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் விஜயகுமார். இதே நிறுவனத்தின் சி.இ.ஓ ஜோயல் எமர்சன் ஆகியோர் இந்த நிறுவனத்தின் மூலம் கோவை பெரியநாயக்கன்பாளையம், அப்பநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடு மனை இடம் விற்பனைக்கு இருப்பதாகவும் அதில் வீடு கட்டி விற்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டனர்.

இதனை நம்பி கடந்த 2019 ஆம் ஆண்டில் வீட்டுமனை மற்றும் வீடு வாங்குவதற்காக பணத்தை பொதுமக்கள் கொடுத்துள்ளனர். அதில் வீட்டுமனையை கிரையம் செய்ய 10 சதவீத தொகை அட்வான்ஸ் முதலில் தர வேண்டும் எனவும் கிரயத்தின் போது மீதமுள்ள பணத்தை தர வேண்டும் என்ற நிபந்தையுடன் ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர்.

இதில் 26 பேரிடம் கிட்டத்தட்ட 90 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெற்று கொண்ட விஜயகுமார்,பணத்தை கொடுத்தவர்கள் நான்கு முறை பத்திரப்பதிவுக்கு சென்றபோது இடத்தின் உரிமையாளர் வரவில்லை, பங்குதாரர் வரவில்லை என காரணம் கூறி காலத்தை கடத்தி வந்துள்ளார்.

மேலும் பலரிடம் முழுதொகையையும் பெற்றுகொண்டு வீட்டை பாதிவரை கட்டி, மீதமுள்ள பணிகளை கிடப்பில் போட்டதாக பாதிக்கப்பட்டவர்கள், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் விஜயகுமாரை இன்று அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். 26 பேரில் சிலருக்கு பணத்தை கொடுத்ததாக கூறப்படும் நிலையில் 16 பேரிடம் 78 லட்சம் ரூபாய் மோசடி செய்த்தாக, விஜயகுமார் மற்றும் ஜோயல் எமர்சன், திருச்சியை சேர்ந்த கிளமெண்ட் பெர்னா போஸ் ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள கோவை மாநகர குற்றபிரிவு போலீசார் விஜயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருவர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

AddThis Website Tools
Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

12 minutes ago
ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

49 minutes ago
ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

1 hour ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

2 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

2 hours ago

தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை… . மேலிடம் சொல்வதை செய்வேன் ; அண்ணாமலை அறிவிப்பு!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது : இன்று நடைபெற்ற மருதமலை…

3 hours ago