11ம் வகுப்பு மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல் : சக மாணவனின் கொடூர குணம்… பிஞ்சுலேயே நயவஞ்சகம்..!!

Author: Babu Lakshmanan
28 July 2022, 11:40 am

கோவையில் 11-வகுப்பு மாணவியின் நிர்வாண வீடியோவை அனுப்பி மிரட்டிய சிறுவன் மீது கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த 16 வயது சிறுமி அவரது இருப்பிடம் உள்ள அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்தபோது இவரது வகுப்பில் படித்த மாணவர் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11-வகுப்புக்கு சென்ற நிலையில், அந்த மாணவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால், அத்துடன் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு சொந்த ஊரான ஈரோட்டுக்கு சென்றுவிட்டார்.

இருவரும் தொடர்ந்து செல்போனில் தொடர்ந்து உரையாடி வந்த நிலையில், அந்த சிறுவன் மாணவியை காதலிப்பதாக தெரிவித்து ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவியும் அந்த சிறுவனுடன் பேசி வந்த நிலையில், வாய்ஸ் காலில் மட்டுமே பேசி வந்த இருவரும் நாளடைவில் வீடியோ கால் மூலமும் பேசி காதலை வளர்த்தனர்.

இருவரும் வீடியோ காலில் பேசும்போது மாணவியை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாக சிறுவன் தெரிவிக்க, மாணவி மறுப்பு தெரிவித்து நாட்களை கடத்தினார். ஒரு கட்டத்தில் சிறுவனின் தொல்லை தாங்காத மாணவி நிர்வாணமாக வந்து வீடியோ காலில் பேசியதை, சிறுவன் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டுள்ளான். இதையறியாத மாணவி தொடர்ந்து சிறுவனிடம் பழகி வந்த நிலையில் சம்பவத்தன்று, மீண்டும் நிர்வாணமாக வீடியோ காலில் பேசுமாறு சிறுவன் கூறி இருக்கிறான்.

அதற்கு மாணவி பிடிவாதமாக மறுக்க, ஆத்திரம் அடைந்த சிறுவன் “மாணவி ஏற்கனவே ஒருமுறை நிர்வாணமாக நின்றதை நான் வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளதாகவும், மீண்டும் நிர்வாணமாக வரவில்லையென்றால் அந்த காட்சிகளை, மாணவியின் பெற்றோருக்கு அனுப்பி வைத்து விடுவேன் என்று மிரட்டினார். சிறுவன் தன்னிடம் புறம்பு புகழ்வதாக நினைத்த சிறுமி, தன்னிடம் இதுபோல் பொய் சொல்லி ஏமாற்ற நினைக்காதே என்று யதார்த்தமாக பேச, அடுத்த நிமிடம் மாணவியின் செல்போனுக்கு நிர்வாணமாக பேசிய வீடியோ காட்சிகளை அனுப்பி வைத்தான்.

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி இது தொடர்பாக தனது பெற்றோரிடம், தனக்கு நேர்ந்த பிரச்சினையை கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இதைத்தொடர்ந்து மாணவியை கண்டித்த பெற்றோர், இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவன் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மாணவிக்கு சொந்த ஊரைக்கூறாமல், மாணவியை ஏமாற்றி நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய ஈரோட்டைச்சேர்ந்த சிறுவனை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!