9ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்… 63 வயது திமுக முன்னாள் கவுன்சிலர் கைது ; கோவையில் அதிர்ச்சி…!!

Author: Babu Lakshmanan
15 December 2023, 10:52 am

கோவையில் 9ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 63 வயது தி.மு.க முன்னாள் கவுன்சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி. தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த தி.மு.க முன்னாள் கவுன்சிலர் 64 வயது முதியவர் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, அவர் சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்து அங்கு இருந்து தப்பி வீட்டிற்கு ஓடிய சென்ற அவர் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை பற்றி கூறினார்.

இது குறித்து சிறுமிகள் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முன்னாள் கவுன்சிலர் 64 வயது முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 546

    0

    0