மரம் விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு… உடன் வந்த மாணவி படுகாயம் : முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2023, 10:37 am

மரம் விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு… உடன் வந்த மாணவி படுகாயம் : முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மரம் விழுந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

இதுதொடர்பான செய்திக்குறிப்பில், தஞ்சை பசுபதிகோவில்-1 கிராமத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் பாபநாசம் வட்டம். உள்ளிக்கடை, கண்டகரையத்தைச் சார்ந்த சுஷ்மிதாசென் (வயது-15) மற்றும் பாபநாசத்தைச் சேர்ந்த இராஜேஸ்வரி (வயது-15) ஆகிய இருவர் மீதும் நேற்று மாலை பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக பள்ளியின் அருகிலுள்ள மரம் வேறோடு சாய்து விழுந்ததில் சுஷ்மிதாசென் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இராஜேஸ்வரிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

மாணவி செல்வி.சுஷ்மிதாஷென்னை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இராஜேஸ்வரிக்கு ஒரு இலட்சம் ரூபாயும் நிதியதவி வழங்கவும் உத்திரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 285

    0

    0