மேலூரில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம்: அரசுப்பேருந்து மீது மர்மநபர்கள் கல்வீச்சு..10 பேர் படுகாயம்..!!
Author: Rajesh6 மார்ச் 2022, 10:33 மணி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைபட்டியில் 17 வயது சிறுமி அதே ஊரைச் சேர்ந்த நாகூர் அனிபா என்ற இளைஞன் காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்று பின்னர் மயங்கிய நிலையில் தாயார் மூலம் அவரது வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
கடந்த 3 நாட்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து தற்பொழுது உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தும்பைபட்டியை சேர்ந்த நாகூர் அனிபா, அவனது தந்தை சுல்தான், அவனது தாய் மதினா சகோதரர் ராஜாமுகமது உறவினர்களான ரம்ஜான்பேகம், சாகுல் ஹமீது உள்ளிட்ட 8 பேரை மேலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனால் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி, தும்பைப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அரசு பேருந்து மீது 5க்கும் மேற்பட்ட மர்மநபர்கள், கல் மற்றும் கட்டைகளால் தாக்கியதில் பேருந்தில் பயணம் செய்த திருநெல்வேலியை சேர்ந்த கல்லூரி மாணவிகள் அயிலா, லக்சிதா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்,
மேலும் தும்பைப்பட்டியல் 500க்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் கூடி இருப்பதால் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
0
0