பிளஸ் 2 மாணவிக்கு சும்மா, சும்மா வந்த கனவு.. 3 படத்தை போல நடந்த சம்பவம் ; சென்னையில் பகீர் சம்பவம்!!

Author: Babu Lakshmanan
18 March 2024, 5:10 pm

சென்னை அருகே பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாப்பூர் முத்து நகர் பகுதியைச் சேர்ந்த நாகலட்சுமி என்பவர், கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான வகுப்புகளை வீட்டில் நடத்தி வருகிறார். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு ஒரு மகன், மகள் உ ள்ள நிலையில், மகள் ஜனனி மயிலாப்பூரில் உள்ள பெண்கள் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, ஜனனி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார், ஜனனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.

பின்னர் மாணவியின் அறையை சோதனை செய்த போது, ஜனனி எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், “இரவில் தூங்கும் போது அடிக்கடி தூக்குப்போடுவது போன்ற கனவு வருகிறது. இதனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, 3 படத்தை போல நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன். அம்மா, அண்ணன் மற்றும் நண்பர்களை பிரிவது மிகவும் வருத்தமாக உள்ளது” என எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இருப்பினும், மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Director Rv Udayakumar Talked About Vijay Politics Entryஇது மட்டும் இல்லைனா விஜய் கட்சியே ஆரம்பித்திருக்க முடியாது : புயலை கிளப்பிய இயக்குநர்!