மதிய உணவில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டு மாணவி தற்கொலை முயற்சி… தானும் உயிரை விடுகிறேன் என விஷ சாப்பாட்டை வாங்கி சாப்பிட்ட சக தோழி…!

Author: Babu Lakshmanan
5 January 2024, 8:14 pm

ஸ்ரீபெரும்புதூர் அருகே மதிய உணவில் எலி மருந்து கலந்து தற்கொலைக்கு முயன்ற மாணவிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே சிருமாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் ஜெயஶ்ரீ (15). இவர் சுங்குவார்சத்திரம் அருகே மொளச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், ஜெயஶ்ரீ சரிவர படிக்காததால் அவரது பெற்றோர்கள் தொடர்ந்து கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவி ஜெயஶ்ரீ மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

தொடர்ந்து மனஉளைச்சலில் இருந்து வந்த ஜெயஶ்ரீ ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி ஜெயஶ்ரீ, வீட்டில் இருந்து எடுத்து வந்த எலி மருந்தை மதிய உணவு சாப்பிடும்போது, உணவில் எலி மருந்து கலந்து சாப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த திருமங்கலம் கண்டிகை பகுதியைச் சேர்ந்த தோழியான மாணவி ஏகலட்சுமி(15), உன்னுடன் நானும் சேர்ந்து தற்கொலை செய்துகொள்கிறேன் என கூறி எலி மருந்து கலந்த உணவை ஏகலட்சுமியும் சாப்பிட்டுள்ளார்.

இதைப் பார்த்த சக மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். உடனே ஆசிரியர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலிசார் மொளச்சூர் பள்ளி ஆசிரியர் மற்றும் சக மாணவிகளிடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மொளச்சூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இருவரும் உணவில் எலி மருந்து கலந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் பள்ளி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!