10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை : அரசுப் பள்ளி தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!

Author: Babu Lakshmanan
15 September 2022, 4:59 pm

தூத்துக்குடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஆனந்தராஜ் (56), என்பவர் முத்தையாபுரத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் அரசு உதவிபெறும் பள்ளிதலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பள்ளியில் படிக்கும் 10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜை கைது செய்தார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!