கோபத்தில் பளார் விட்ட தலைமை ஆசிரியர்… காது கேட்காமல் பிளஸ் 2 மாணவன் மருத்துவமனையில் அனுமதி..!!

Author: Babu Lakshmanan
20 அக்டோபர் 2023, 1:17 மணி
Quick Share

வேடசந்தூர் அருகே தலைமை ஆசிரியர் தாக்கியதால் காது கேட்கவில்லை என்று கூறி பிளஸ் டூ மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள இராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1000 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ரவிச்சந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.

இந்த நிலையில், நேற்று மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. அந்த விழாவில் மாணவர்கள் ஆர்வம் மிகுதியால் சைக்கிளில் இருந்த பெல்லை அடித்துள்ளனர். அப்போது, சைக்கிள் பெல்லை அடித்த பொன்னிவளவன் என்ற பிளஸ் 2 மாணவனை தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் வலது பக்க காது கேட்கவில்லை என்று கூறி பொன்னிவளவன் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் மாலை சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமை ஆசிரியர் தாக்கியதாக கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Beggar பிச்சைக்காரரிடம் கடன் வாங்கிய தொழிலதிபர்.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்!
  • Views: - 323

    0

    0