நண்பர்களோடு மது அருந்திய 12ம் வகுப்பு பள்ளி மாணவன்… திடீரென ஏற்பட்ட வயிற்று வலி… மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
26 September 2022, 7:06 pm

ராமநாதபுரம் அருகே நண்பர்களோடு மது அருந்திய 12ம் வகுப்பு பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கமுதி அருகே உள்ள போத்த நதி கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவனுக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதுவும் கடந்த 6 மாதமாக நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

அதேவேளையில், மாணவனுக்கு அல்சர் இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் நண்பர்களோடு சேர்ந்து மாணவன் மீண்டும் மது அருந்தி உள்ளார். அப்போது அவருக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால், அந்த மாணவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் மீண்டும் வயிற்றுவலி அதிகமாகியுள்ளது. பின்னர், கமுதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Rajini took the actress who was shooting in the car படப்பிடிப்பில் இருந்த நடிகையை காரில் போட்டு தூக்கிச் சென்ற ரஜினி.. பல நாள் பிறகு வெளியான உண்மை!