தடுப்பணையில் குளிக்கச் சென்ற 11ம் வகுப்பு மாணவன் ; பள்ளிக்குச் செல்லாமல் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
29 September 2022, 9:07 pm
Quick Share

கோவை பெருமாள்கோவில் பதி தடுப்பணை மூழ்கிய பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆலந்துறை பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (16). அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளிச் செல்லாமல் தனது சக நண்பர்கள் 3 பேருடன் ஆலாந்துறை அடுத்த பெருமாள்பதி கோவில் தடுப்பணையில் குளிக்கச் சென்றனர்.

இந்நிலையில் நீரில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்த நவீன்குமார் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதைக்கண்ட நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் மாணவர் நீரில் மூழ்கினார்.

சக நண்பர்கள் அளித்த தகவல் அடிப்படையில் ஆலாந்துறை போலீசார் மற்றும் தொண்டாமுத்தூர் தீயணைப்பு வீரர்கள் நவீன்குமார் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஆலந்துறை போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 317

0

0