தனியார் பேருந்தில் இருந்து இறங்கும் போது பள்ளி மாணவன் சக்கரத்தில் சிக்கி பலி : ஷாக் சிசிடிவி காட்சி.. பேருந்து மீது கல்வீசித் தாக்குதல்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2022, 11:53 am

விழுப்புரம் : தனியார் பேருந்திலிருந்து இறங்கும் போது பள்ளி மாணவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் வானியம்பாளையத்தை சார்ந்த அனிஷ் என்ற 9 ஆம் வகுப்பு மாணவன் வாணியம்பாளையத்திலிருந்து நேற்று காலை விழுப்புரம் பழைய நிலையத்திற்கு சுகம் என்ற தனியார் பேருந்துவில் நண்பர்களுடன் பயணித்துள்ளார். 

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே பேருந்து வந்த போது அனிஷ்வுடன் வந்தவர்கள் ஓடும் பேருந்துவிலிருந்து இறங்கியுள்ளனர். இதனையடுத்து அனீஷ் இறங்க முற்படும் போது நிலை தடுமாறி விழுந்து பேருந்துவின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்தான்.

மாணவன் உயிரிழந்தையடுத்து இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை செய்தனர். விசாரணையில் பள்ளி மாணவன் படியில் நின்றவாறு சென்று கீழே இறங்கியபோது நிலை தடுமாறி டயரில் சிக்கி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு பேருந்து வானியம் பாளையம் சென்றபோது சிறுவனின் உறவினர்கள் பேருந்து மீது கற்களை கொண்டு வீசி தாக்கி உடைத்துள்ளனர்.

பேருந்து மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பேருந்து நடத்துனர், ஓட்டுனர், பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.

இதனால் பாதிக்கப்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கும் நடத்துனருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதால் பாதுகாப்பு வழங்க விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ