பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனை பள்ளி வளாகத்தில் உச்சி வெயிலில் முட்டி போட வைத்த ஆசிரியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்புவரை சுமார் 1600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு காலை நடந்தது. இதனால் மற்ற வகுப்புகளுக்கு மதியம் பள்ளிக்கு மாணவ மாணவிகள் வருவார்கள். அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
ஆனால் நேற்று செந்துறை மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரையும், செந்துறை அரசு தொடக்கப்பள்ளிக்கு சிறப்பு படிப்பு பயிற்சிக்காக ரகுநாத், முனிசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் ஆசிரியர்கள் வரவழைத்தனர்.
ஆனால் 10-ம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் வகுப்புகளுக்கு சரிவர வராமலும், பள்ளிக்கு நேற்று காலை காலதாமதமாக வருவதாக கூறப்படுகிறது. இதனால், ரகுநாத் என்ற ஆசிரியர் அந்த மாணவரை அழைத்து திட்டி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், செந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மதியம் உச்சி வெயிலில் பள்ளி மைதானத்தில் முட்டி போட்டுக் கொண்டே படிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த மாணவன் சூடுதாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அலறித் துடித்தான். இதை அங்குள்ள சிலர் ரகசியமாக படம் பிடித்து வாட்ஸ்அப் குரூப்களுக்கு அனுப்ப அது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.