அறிவுரை கூறிய அரசு பேருந்து ஓட்டுநரின் முகத்தை பிளேடால் கிழித்த பள்ளி மாணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2023, 1:49 pm

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து அரக்கோணம் நோக்கி அரசு டவுன் பஸ் சென்றது. கரிக்கல் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பஸ் படியில் ஆபத்தான முறையில் தொங்கியபடி ஒரு மாணவன் வந்துள்ளான்.

இதைக்கண்ட பஸ் டிரைவர் பாலாஜி பஸ்சை நிறுத்திவிட்டு அந்த மாணவனிடம் உள்ளே வரும்படி கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவன் டிரைவரை பயணிகள் கண்முன் தகாத வார்த்தையால் திட்டியுள்ளான்.

மேலும் தான் வைத்திருந்த பிளேடால் டிரைவரின் முகத்தை கிழித்ததாக கூறப்படுகிறது. இதில் டிரைவரின் முகத்தில் ரத்தம் வழிந்தது. இதைக்கண்ட பயணிகள் கூச்சலிட்டனர்.

மேலும் தப்ப முயன்ற அந்த மாணவனை பிடித்தனர். இதுகுறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த மாணவனை பிடித்து விசாரித்தனர்.

அந்த மாணவன் அரசு நிதியுதவி பள்ளியில் பிளஸ் 1 படித்து வருவதும் என தெரியவந்தது. மாணவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காயமடைந்த டிரைவர் பாலாஜி சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

  • Annamalai vs Cool Suresh Whip Trendஅண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 776

    0

    0