கஞ்சா விற்ற பணம் எங்கே.. பள்ளி மாணவர்களை சித்ரவதை செய்த வீடியோ வைரல்! அடுத்தடுத்து சிக்கும் புள்ளிகள்!

Author: Hariharasudhan
8 March 2025, 12:57 pm

சிதம்பரம் அருகே கஞ்சாவை பள்ளிகளில் வைத்து விற்பனை செய்த மாணவர்களை சித்ரவதை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த ஓமக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உடப்பு சிவா மற்றும் வினோத்குமார். கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இவர்கள், கஞ்சா விற்கும் கும்பலைச் சேர்ந்த விமல்ராஜின் கூட்டாளிகள் ஆவர். மேலும், கஞ்சா புகைப்பது, அதை பொட்டலம் போட்டு காசு பார்ப்பது என இதுவே இவர்கள் முழு நேரத் தொழிலாக இருந்துள்ளது. .

இந்த நிலையில், இவர்களின் கூட்டத்தில் நவீன்ராஜும் ஒரு முக்கிய புள்ளியாக அறியப்படுகிறார். உள்ளூரில் கஞ்சா விற்று வந்த இவர்கள், போலீசாரின் கெடுபிடியால், தங்களிடம் கஞ்சா வாங்கி புகைத்த சில பள்ளி மாணவர்களையும் கஞ்சா விற்கும் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.

அந்த வகையில், இந்த இரு மாணவர்கள் இவர்களிடம் சிக்கியுள்ளனர். இதன்படி, கஞ்சா பொட்டலங்களை மாணவர்களிடம் கொடுத்து, பள்ளிக்கூடத்தில் விற்று வரச் சொல்லியிருக்கிறார்கள். விற்றுக் கொடுத்தால் பணம் கிடைக்கும் என நினைத்த மாணவர்கள், கஞ்சாவை விற்று நிறைய பணம் சம்பாதித்துள்ளனர்.

Ganja Fight

ஆனால், அந்த பணத்தை கும்பலிடம் ஒப்படைக்காமல், தாங்களே வைத்துக்கொள்ள எண்ணியுள்ளனர். இதனை அறிந்த அக்கும்பலைச் சேர்ந்தவர்கள், தங்களது வாடகை அறைக்கு இரு பள்ளி மாணவர்களையும் வரவழைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்போது, கதவை பூட்டி வைத்து கன்னத்தில் அறைந்து மாணவர்களைச் சித்ரவதை செய்துள்ளனர்.

இதனை கஞ்சா கும்பலின் தலைவரான விமல்ராஜ் வீடியோ எடுத்து சிரித்துக்கொண்டே ரசித்துள்ளார். மேலும், ‘கஞ்சா விற்றதற்கான பணம் ஆயிரம் ரூபாய் வரவில்லை என்றால் அறுத்து போட்டுவிடுவேன்’ என மிரட்டல் விடுத்துக்கொண்டே அவர்களைத் தாக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: நாங்க ஒன்னும் தவம் இருக்கல.. அண்ணாமலைக்கு அதிமுக பதிலடி!

பள்ளி மாணவர்களின் செல்போன்களை பிடுங்கி வைத்து கொண்டு யாரிடம் வேண்டுமானாலும் சொல்.. ஜெயிலுக்கே போனாலும் வெளியே வந்து வெட்டுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் நடந்து இரண்டு மாதங்களான நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இக்கும்பலைச் சேர்ந்த சிவா மற்றும் வினோத் குமார் உள்ளிட்ட 11 பேரை காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அதில் உடப்பு சிவா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் விமல்ராஜ் மற்றும் சிவராஜ் ஆகியோர் தலைமறைவாக இருப்பதும், அவர்களைப் பிடிக்கவும் தனிப்படை அமைத்து தீவிரம் காட்டி வருகின்றனர்.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!