ரோட்டுல குழி இருக்கலாம் ஆனா, குழியில் தான் ரோடு இருக்கு.. ஆபத்தான நிலையில் சாலையை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்..!

Author: Vignesh
3 July 2024, 12:58 pm

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே ஆந்திரா கர்நாடகா செல்லும் முக்கிய சாலையான பலமனேர் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கால்வாய் நீர் பிரச்சனைக்காக 7 அடி ஆழம் கொண்ட பள்ளம் தோண்டப்பட்டது.

இதனால் அகலமான சாலை குறுகி கனக வாகனங்கள் சிரமப்பட்டு கடந்து செல்கின்றன. மேலும், பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்லும் பெண்களும் அந்தப் பள்ளத்தை ஒட்டியவரே நடந்து செல்ல வேண்டி இருக்கிறது.

மாணவர்கள் பள்ளத்தை கடந்து செல்லும் பொழுது ஏதேனும் கனரக வாகனங்கள் வந்தால் ஒதுங்க இடமில்லாமல் பள்ளத்தில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்விடத்தில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

பள்ளத்தை மூடி சாலையை சீரமைத்து தர கோரி பலமுறை நெடுஞ்சாலை துறை இடமும் பஞ்சாயத்து அலுவலகத்திலும் முறையிட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி