பேருந்து நிலையத்தில் புகைப்பிடிக்கும் அரசுப் பள்ளி மாணவிகள்.. அதிர்ச்சி வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan14 October 2024, 7:21 pm
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவிகள் இருவர் புகை பிடிக்கும் காட்சி காண்போர் நெஞ்சை பதற வைப்பதாக இருக்கிறது.
பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பள்ளிகளில் நல்ல பண்புகளையும் பழக்க வழக்கங்களையும், சிறந்த கல்வியையும் கற்று வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்வார்கள் என்று பெற்றோர்கள் எதிர்பார்ப்பதுதான் வாடிக்கை.
ஆனால் பள்ளி மாணவிகள், பள்ளி சீருடையுடன் பொதுவெளியில் பேருந்து நிலையத்தில் புகைபிடிக்கும் காட்சியை கண்டு பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் அதிர்ந்து போய் உள்ளனர்.
புகை பிடிக்கும் பள்ளி மாணவிகள்!#Trending | #Cuddalore | #GovtSchool | #Stuents | #smoking | #ViralVideos | #UpdateNews360 pic.twitter.com/PTM7luit3E
— UpdateNews360Tamil (@updatenewstamil) October 14, 2024
இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. மாணவர்கள் தான் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது மாணவிகளே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.