சத்து மாத்திரை சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு திடீர் வாந்தி மயக்கம் : அரசுப் பள்ளியில் பரபரப்பு… நேரில் சட்டமன்ற உறுப்பினர் விசாரணை!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2022, 2:10 pm

விழுப்புரம் அருகே வெங்கந்துார் அரசு நடுநிலைப் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட 25 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதி.

விழுப்புரம் அடுத்துள்ள வெங்கந்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றன. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இதில் சத்து மாத்திரை சாப்பிட்ட 25 மாணவ மாணவியருக்கு லேசான வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வீடு திரும்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மாணவர்களிடம் நலன் குறித்து அங்குள்ள மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

பின்னர் மாணவரிடம் பேசிய அவர் உடல் நலம் குறித்து விசாரணை நடத்தி பயப்பட வேண்டாம் என அறிவுறுத்தினார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!