உதயநிதி பிறந்தநாளுக்காக வெயிலில் மாணவர்களை அலைக்கழித்த விவகாரம் : செக் வைத்த பாஜக!!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2024, 9:39 am

உதயநிதி பிறந்தநாளுக்காக தென்காசி ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள பள்ளியில் மாணவர்களை ஒன்றிணைத்து ஹேப்பி பர்த்டே உதயண்ணா என கூற வைத்த வீடியோ பேசுபொருளாக மாறியுள்ளது.

இது குறித்து பாஜக தனது X தளப்பக்கத்தில், தென்காசி மாவட்டத்தில் ஐந்தருவி அருகே உள்ள ஒரு பள்ளியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி சிறார்களை பட்டப்பகலில் மொட்டை வெயிலில் நிற்க வைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூற கட்டாயப்படுத்தியுள்ள, அன்பில் மகேஷ் அவர்களின் அடியாட்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். “உங்கள் அநீதிகளுக்கு ஒரு அளவே இல்லையா தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களே? தென்காசி மாவட்டம் ஐந்தருவி சாலையில் உள்ள ஒரு பள்ளியில், பள்ளிச் சிறுவர்களை உச்சி வெயிலில் நிற்க வைத்து உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர் உங்களின் கழக உடன் பிறப்புகள்.

இதையும் படியுங்க: எல்லா ஏரியாவிலும் கில்லி.. இத்தனை கோடிக்கு அதிபதியா உதயநிதி ஸ்டாலின்?

தமிழக மாணவர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து உங்கள் இஷ்டம் போல ஆட்டிப் படைப்பது இது ஒன்றும் முதன்முறையல்ல.

உங்கள் தந்தையான தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், உங்களுக்கு 100/100 மதிப்பெண் வழங்கி அழகுபார்த்தது இதற்குத்தானா? பிறந்தநாள் வாழ்த்து என்பது அன்பின் பேரில் கிடைப்பது என்பதை மறந்துவிட்டு, வாழ்த்து சொல்லச் சொல்லி பள்ளிக் குழந்தைகளை இவ்வாறு கட்டாயப்படுத்துவது தான் திராவிட மாடல் அரசா?

உங்களின் தற்பெருமையைத் தம்பட்டம் அடித்துக் கொள்ள தமிழக பள்ளி மாணவர்கள் கிடைத்தார்களா?” என பதிவிட்டுள்ளார்.

BJP Petition to Collector

இதனிடையே இச்சம்பம் குறித்து விசாரணை நடத்தக்கோரி தமிழக பாஜக தொடக்கப் பிரிவு தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமையில் பாஜக நிர்வாகிகள் தென்காசி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது..

  • Aamir Khan Quit Smoking for Son மகனுக்காக அதை பண்ண ரெடி…பட விழாவில் அமீர் கான் பரபர பேச்சு..!
  • Views: - 333

    0

    0