பள்ளி மாணவனுடன் காதலில் விழுந்த ஆசிரியை… திடீரென காதலை கைவிட்டதால் மாணவன் விரக்தி… போக்சோவில் ஆசிரியை கைது..!!

Author: Babu Lakshmanan
12 October 2022, 6:54 pm

சென்னை : சென்னையில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூரைச் சேர்ந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மே மாதம் தான் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார். இந்த நிலையில், கல்லூரி சேருவதற்காக, கடந்த மாதம் 30ம் தேதி கலந்தாய்வுக்காக, மாநில கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவன், வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாணவனின் தற்கொலை சம்பவம் தொடர்பாக அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது, தான் பயின்று வந்த பள்ளியில் ஷர்மிளா என்ற ஆசிரியை மாணவனை காதலித்து வந்ததும், சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், மாணவனிடம் இருந்து தொடர்பை ஷர்மிளா முறித்துக் கொண்டது தெரிய வந்துள்ளது.

ஆசிரியையுடனான காதல் முறிவால் விரக்தி அடைந்த மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆசிரியை ஷர்மிளாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!