பள்ளி மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் : தலைமறைவான காதலன்… கரூரில் அதிர்ச்சி சம்பவம்!!

Author: kavin kumar
26 January 2022, 9:10 pm

கரூர் : கரூர் அருகே பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.                              

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் 17 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அவர்  அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த மாணவிக்கும் திருப்பூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மேலும், அந்த மாணவியை குமார் திருமணம் செய்வதாக கூறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த தகவல் மாணவி வசித்து வரும் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் வேலை பார்த்து வரும் மாரிமுத்து( 35) என்பவருக்கு தெரிய வந்துள்ளது.

இதையடுத்து மாரிமுத்து இந்த தகவலை வெளியே சொல்லி அம்பலப்படுத்துவேன் எனவும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக் கூறி மிரட்டி மாணவியிடம் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவி தற்போது 8 மாத கர்ப்பணியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த மாணவி கரூர் அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்த வழக்கில் மெக்கானிக் மாரிமுத்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், தலைமறைவாக உள்ள காதலன் குமாரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட காதலை வைத்து பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vanitha Vijayakumar personal life நீங்க ஏன் ஒரு பெண்ணை காதலிக்க கூடாது…அம்மாவை பார்த்து நடிகையின் மகள் கேள்வி..?