அமைச்சர் பொன்முடி மீது பள்ளி மாணவிகள் அதிருப்தி : பள்ளி விழாவில் பங்கேற்காமல் வேறு விழாவுக்கு சென்றதால் ஏமாற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2022, 11:49 am

விழுப்புரம் : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அரசு துறை கண்காட்சி துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் திருக்கோவிலூரில் வேறொரு நிகழ்ச்சிக்கு சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் அவதியடைந்தனர்.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் இன்று காலை செய்தித்துறை சார்பில் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் வகையில் அவரின் வாழ்க்கை வரலாறு குறித்து அரசுப் பேருந்தில் புகைப்படக் கண்காட்சியினை விழுப்புரம் திரு. காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவக்கி வைக்க இருந்த நிலையில் காலை 8 மணிக்கெல்லாம் மாணவர்களையும் பள்ளி மாணவிகளை இந்த விழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வந்து அமர வைக்கப்பட்டிருந்தனர்.

இதேபோல அரசு அதிகாரிகள் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர்.

ஒரு மணி நேரம் ஆகியும் வராததால் சந்தேகமடைந்து திமுகவினர் அமைச்சரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் திருக்கோவிலூருக்கு சென்று கொண்டிருப்பதாக கூறியதால் ஏமாற்றமடைந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அமைச்சர் அன்றைய தினம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு அரசு அதிகாரிகள் அனுமதி வாங்காததே இதற்கு காரணம் என திமுகவினர் கூறினர். அமைச்சர் வராதது குறித்து ஒரு மணி நேரம் கழித்து கூறியது மாணவ மாணவிகள் ஏமாற்றமடைந்ததோடு சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 1315

    0

    0