மாணவர்களுக்கு டஃப் கொடுத்த மாணவிகள்…பஸ் ஸ்டாண்டில் குடுமிப்பிடி சண்டை: முகம் சுளித்த பயணிகள்..!!

Author: Rajesh
1 May 2022, 12:58 pm

மதுரை: பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் குழுவாக மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாநகரின் முக்கிய பேருந்து நிலையமாக பெரியார் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் வருகையால் பேருந்து நிலையம் அளவுக்கதிகமான கூட்டமாக காணப்படும். இந்த நிலையில் இன்று மாலை 4 மணியளவில் பள்ளியில் இருந்து வீடு செல்ல பெரியார் பேருந்து நிலையத்தை வந்துள்ளனர். இரு அணி மாணவர்களுக்கிடையே மிகப்பெரிய கடந்த மூன்று நாட்களாக கருத்துவேறுபாடு இருந்துள்ளது. இரண்டு நாட்களாகவே மாணவிகள் பெரியார் பேருந்து நிலையத்தில் சண்டையிட்டுக் கொள்வது வாடிக்கையாக இருந்துள்ளது. அது இன்று மிகப்பெரிய சண்டையாக மாறி மாணவிகளுக்குள் குடிமைப்பணி சண்டையாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதனை பார்த்த பயணிகள் மிகவும் வெறுப்போடு சென்றதோடு மட்டுமல்லாமல் இன்றைய சமுதாயம் சீரழிந்து போகிறது என்ற வேதனை அடைந்தனர். மதுரை மாநகர காவல் துறையினர் மற்றும் அரசு மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?