பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த பள்ளி மாணவிகள் : திடீர் சாலை மறியலால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2022, 3:55 pm

பொள்ளாச்சி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ-மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

பொள்ளாச்சி அருகே உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லைதருவதாக பாலச்சந்தர் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய இரண்டு ஆசிரியர்கள் மீது அந்த அரசு பள்ளி மாணவி, குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்தார்.

இதன் பேரில் கோட்டூர் காவல்துறையினர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு.ஆசிரியர்கள் இருவர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இன்று பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் சமத்தூர் தேவனூர் புதூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து மாணவ மாணவியர் கூறியதாவது, எங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மீது எந்த தவறும் கிடையாது. அவர்கள் மீது முறையான விசாரணை மாவட்ட ஆட்சியர் செய்ய வேண்டும் மற்றும் பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் மேலும் சில நாளிதழ்களில் தங்களுடைய பள்ளியின் பெயர் குறிப்பிட்டுள்ளதாகவும் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு வந்த வால்பாறை துணை கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன், ஆய்வாளர் ஹரிஹரன் மற்றும் கோட்டூர் காவல்துறையினர் மாணவ-மாணவிகளிடம் சமரசம் பேசி வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறி சமரசம் செய்தனர். இதனால் சமத்தூர் – தேவனூர் புதூர் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!