தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: என்னென்ன செய்யலாம்…எவையெல்லாம் செய்யக்கூடாது?…வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

Author: Rajesh
31 January 2022, 4:15 pm

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கொரோனா பரவல் காரணமாக சுழற்சி முறையிலேயே பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஆனால் நாளை முதல் 100 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நாளை பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை மாணவர்கள் வகுப்புகளில் சுகாதாரமான முறையில் அமரும் வகையில் அனைத்து விதமான ஏற்பாடுகளையும் பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

மாணவர்கள் அமரும் இருக்கைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் நாளை முழு அளவில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் வருகை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 1 கோடி மாணவ-மாணவியர் பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அறிவித்த சுழற்சி முறை வகுப்புகள் கிடையாது. அதனால் தினமும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்கள் வழக்கம் போல உட்கார வைக்கப்படுவார்கள். முன்னதாக அவர்களுக்கு கிருமி நாசினிகள் வழங்கப்பட்டு கைகள் தூய்மை செய்யப்படுவது உள்ளிட்ட அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இன்று அனைத்து பள்ளி ஆசிரியர்கள் குழு ஏற்பாடு செய்யும். அதனால் அனைத்து ஆசிரியர்களும் இன்று தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 2256

    0

    0