இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன மகிழ்ச்சியான தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2022, 7:15 pm

சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கொரோனா காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்ப்டடது. இதனை சரி செய்ய அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்த திட்டமிடப்பட்டு அதன்படி நடைபெற்று வருகிறது.

ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சனிக்கிழமை நாட்களில் விடுமுறையை அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதன்படி கோரிக்கையை ஏற்று 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சனிக்கிழமையும் விடுமுறை வழங்க அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…