மக்களே வெளிய போறீங்களா? சுட்டெரிக்கும் வெயில்.. இந்தியாவில் ஈரோடு TOP.. வானிலை மையம் WARN!
Author: Udayachandran RadhaKrishnan23 April 2024, 2:47 pm
மக்களே வெளிய போறீங்களா? சுட்டெரிக்கும் வெயில்.. இந்தியாவில் ஈரோடு TOP.. வானிலை மையம் WARN!
கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கடுமையாக வாட்டியது. இதனால் மக்கள் வரும் கோடை காலத்தை எதிர்கொள்ள தயாராக இருந்தனர்.
ஆனால் நாளாக நாளாக வெயிலின் தாக்கம் அதிகமானது. இதனால் மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். ஏன் நாடாளுமன்ற தேர்தலில் கூட வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு காரணம் வெயிலைத் தான் கூறி வருகின்றனர்.
இன்னும் வரும் நாட்களில் கடும் வெயில் சுட்டெரிக்கும் என கூறப்படுகிறது. போதாக்குறைக்கு அக்னி நட்சத்திரம் வேறு ஆரம்பமாகிறது.
இந்த நிலையில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம், கர்நாடகாவின் உள் மாவட்டங்கள், ஒடிசா, உ.பி, பிகார் மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட் மற்றும் மேற்கு வங்கத்திற்கு அதிக வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
மேலும் படிக்க: தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை.. 30 கிலோ மீட்டர் கடலில் நீந்தி சென்ற முதியவர் : காத்திருந்த TWIST!
அதற்கு அடுத்தப்படியாக ஈரோட்டில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெயிலால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், பிற்பகல் நேரத்தில் வெயில் அதிகளவில் இருக்கும் என்பதால், குழந்தைகள், முதியோர் வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளது.