சுட்டெரிக்கும் வெயில்.. கோவை மக்களே.. இந்த நேரத்துல மட்டும் வெளியே போகாதீங்க : ஆட்சியர் ADVICE!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2024, 2:49 pm

சுட்டெரிக்கும் வெயில்.. கோவை மக்களே.. இந்த நேரத்துல மட்டும் வெளியே போகாதீங்க : ஆட்சியர் ADVICE!

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 23.4.2024 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக நடத்தப்படும்.. இது என் GUARANTEE : ராகுல்காந்தி உறுதி!

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!