சுட்டெரிக்கும் சூரியன்… குளத்தில் உற்சாக குளியல் போட்ட கோவில் யானை தெய்வானை.. கியூட் வீடியோ!!!
Author: Udayachandran RadhaKrishnan12 April 2023, 6:46 pm
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக இருக்கக்கூடிய கோவில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.
முருகப்பெருமானின் இந்த கோவிலில் பங்குனித் திருவிழாவின் சிகர நிகழ்வுகளான திருக்கல்யாண வைபவம், திருத்தேரோட்டம் ஆகியவை கோலாகலமாக பக்தர்களின் அரோகரா தோஷம் முழங்க நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பின்புறம் இருக்கக்கூடிய பகுதியில் கோவில் யானை தெய்வானை பாகனுடன் சென்ற நிலையில் சுட்டெரிக்கும் வெயிலில் சூட்டை தணிக்கும் வகையில் ஆனந்தமாக உருண்டு புரண்டு தண்ணீரில் விளையாடும் காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது
சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீரைக் கண்டால் யாருக்குத்தான் பிடிக்காது மனிதர்களாகிய நாமே நீச்சல் குளத்தை தேடும் போது யானை குதித்து விளையாடக்கூடிய காட்சி காண்பவரை மகிழ்ச்சி அடையச் செய்கிறது.
ஏற்கனவே சென்ற மாதம் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் யானை குழிக்கக்கூடிய காட்சிகள் வெளியாகிய நிலையில் தற்போது திருப்பரங்குன்றம் கோவில் தெய்வானை யானை குழிக்கக்கூடிய காட்சிகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது