அலற வைக்கும் அஞ்சு வீடு… அடுத்தடுத்து காவு வாங்குவதால் சுற்றுலா பயணிகள் பீதி : அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan19 January 2024, 2:06 pm
அலற வைக்கும் அஞ்சு வீடு… அடுத்தடுத்து காவு வாங்குவதால் சுற்றுலா பயணிகள் பீதி : அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தளமாகும் பல்வேறு இடங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவது வழக்கம்.
கொடைக்கானல் அருகே உள்ள அஞ்சு வீடு அருவி மிகவும் பிரசித்தி பெற்ற அருவியாகும்.. வாகனங்களில் பயணம் செய்தாலும் சிறிது தூரம் நடந்தது தான் இந்த அருவிக்கு செல்ல முடியும். கொடைக்கானலில் இருந்து வெளியேறப்படக்கூடிய அனைத்து நீர் ஓடைகளும் இந்த அஞ்சு வீட்டு அருகில் ஒன்று சேர்ந்து அங்கிருந்து பழனிக்கு செல்லும்..
பல ஆண்டுகளாகவே அஞ்சு வீடு அருவியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் எடுக்காததால் பழிவாங்கும் அருவியாகவே மாறி உள்ளது இந்த அஞ்சு வீடு அருவி …
இந்நிலையில் இதுவரை 11 நபர்கள் இந்த அஞ்சு வீட்டு அருகில் குழிக்கும் போது உயிரிழந்த உள்ளனர் . இதில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொடைக்கானலை சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவர்களும் அடங்குவர் சக நண்பர்களுடன் அஞ்சு வீடு அருவிக்கு சென்ற இந்த மாணவர்கள் குளிக்கும் பொழுது அருகில் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் கொடைக்கானலில் வெறும் பரபரப்பை ஏற்படுத்தியது… தொடர்ந்து அஞ்சு வீடு அருகில் பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் மாவட்ட வன அலுவலர், கோட்டாட்சியர் , காவல் துறையினர் , மக்கள் பிரதிநிதிகள், உள்ளிட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகளும் அஞ்சு வீடு அறிவியல் ஆய்வு செய்தனர் அப்போது வனத்துறையினர் தங்களுக்கு இந்த இடம் சொந்தம் இல்லை என்று கூறியது இதனைத் தொடர்ந்து உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடித்து விடப்பட்டுள்ளது இந்த நிலையில் அஞ்சு வீடு அருவியை தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு குளிக்கும் இடம் செல்லக்கூடிய