நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.. கதவை திறந்து பார்த்த போது சடலமாக கிடந்த மனைவி.. விசாரணையில் திக் திக்!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2024, 1:58 pm

காரை பூங்கா கம்பன் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்த் (34) லட்சுமி(26) தம்பதியருக்கு நான்கு வயதில் பெண் குழந்தையும் இரண்டு வயதில் ஆண் குழந்தைகளும் உள்ளது

இந்த நிலையில் லட்சுமி தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை வரும் நிலையில் அரவிந்த் எவ்வித வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார்

இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படு வந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று இரவு அரவிந்த் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து லட்சுமி இடம் தகராறு செய்ததோடு வீட்டிலிருந்த கத்தியை கொண்டு லட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார்

இதில் பலத்த காயமடைந்த லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது லட்சுமி ரத்த வெள்ளத்தில் விழுந்திருப்பதை இருப்பதை கண்டு உடனடியாக லட்சுமியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் லட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை காவல் துறையினர் அரவிந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 363

    0

    0