மசாஜ் சென்டர் நடத்தி வரும் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு : வீடு புகுந்து தாக்கிய இளைஞர்கள்.. ஷாக் சிசிடிவி!!
Author: Udayachandran RadhaKrishnan17 June 2022, 7:08 pm
கோவை : மசாஜ் செண்டர் நடத்தி வரும் பெண் உரிமையாளரை வீடு புகுந்து தாக்கிய இளைஞர்களை போலீசார் தேடி பிடித்த நிலையில் அரிவாளால் தாக்கும் பரபரப்பு காட்சி வெளியிகியுள்ளது.
மணிகண்டன் மட்டுமின்றி உடன் இருந்த கூட்டாளிகளும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை சிங்காநல்லூரில் வசிக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மினி சூலூரில் மசாஜ் சென்டரை நடத்தி வருகின்றார். இந்த மசாஜ் செண்டலில் ஆயூர்வேத மூலிகை ஆயிலால் முட நீக்கியல் செய்கின்றனர்.
இந்த நிலையில் மினி, அவரது சகோதரர் மனைவி வீட்டில் இருந்த பொழுது இரண்டு வாலிபர்கள் தங்களுக்கு மசாஜ் செய்யவேண்டும் என்று கூறி வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.
அப்பொழுது 30 வயது குறைவான ஆண்களுக்கு மசாஜ் செய்வது இல்லை என்றும் மசாஜை பொறுத்தவரையில் செண்டரில் மட்டுமே தாங்கள் செய்து வருவதாகவும் மினி தகவல் தெரிவித்திருக்கின்றார்.
ஆனால் மசாஜ் சென்டர் உரிமையாளர் மினியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் பணம் கேட்டும் மிரட்டியதாக தகவல் கூறப்படுகிறது.
மினியின் வீட்டில் இரண்டு வருடங்களுக்கு முன் இதே போன்று இளைஞர்கள் வந்து மசாஜ் செய்யும்படி கேட்டு பின்னர் மிரட்டி பணம் செல்போன் பறித்து திருட்டில் ஊர் பெயர் தெரியாதவர்கன் ஈடுபட்டிருக்கின்றனர் என்ற தகவலும் ஒன்று உள்ளது.
இந்த சம்பவம் நினைவுக்கு வர மினி வாலிபர்களை வீட்டின் உள் விடாமலே வாசலில் பேசியிருக்கின்றார். வாலிபர்கள் வீட்டுக்குள் வர முயன்ற நிலையில் மினி தடுக்க முயன்ற நிலையில் வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தலை பக்கவாட்டில் வெட்டியிருக்கின்றனர்.
அந்தப் பெண் கூச்சலிட வாலிபர்கள் தப்பி ஓடினர். மினிக்கு கையில் காயம் ஏற்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
இந்த நிலையில் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் கத்திக்குத்துக்கு உள்ளான மினி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அருண் தலைமையிலான தனிப்படை போலிஸார் வழக்கு பதிந்து குற்றவாளியை தேடினர்.
இந்த நிலையில் பீளமேடு பகுதியில் ரவிகுமார் என்ற ஒர்க்ஸாப் தொழிலாளியின் செல்பொனை பறித்து தப்ப முயன்ற நிலையில் ரவிகுமாரை ஒரு சில இளைஞர்கள் வெட்டியதாக பீளமேடு போலிஸ் நிலையத்தில் புகார் நேற்று தரப்பட்டு பீளமேடு போலிஸார் குற்றவாளியை தேடிக்கொண்டிருந்தனர்.
ஒர் இரு நாட்களில் இரண்டு வெட்டு சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்த சிங்காநல்லூர், பீளமேடு போலிஸார் குற்றவாளிகளை வலை வீசி தேடினர்.
அப்போது மாநகர போலீசார் நடத்தி விசாரணையில், முள்ளுக்காட்டில் நண்பர்களுடன் இருந்த மணிகண்டன் கூண்டோடு சிக்கியிருக்கின்றான். அவனே இரண்டு குற்றங்களையும் செய்தது விசாரணையில் தகவல் தெரியவந்திருக்கின்றன.
மணிகண்டன் மட்டுமின்றி உடன் சம்பவத்துக்கு உதவிய கூட்டாளிகளும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். பட்ட பகலில் இரண்டு இடங்களில் அசால்டு செய்த குற்றவாளிகளை பதுங்கியிருந்தபோது போலீசார் பொடிவைத்து பிடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.