ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு.. எஸ்கேப் ஆன நபர்களை சுற்றி வளைத்த பொதுமக்கள்..!

Author: Vignesh
9 July 2024, 12:03 pm

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை அறிவாளால் வெட்டி கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்து சென்ற நபர்களை சுற்றி வளைத்து பிடித்த கிராம மக்கள்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மயிலாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் எட்வின் ஜெரோம் இவரது மனைவி 23 வயதான கமலி ஷில்பா இதே பகுதியில் இன்று தங்களது ஆடுகளை வயல்வெளிகளில் மேய்த்துக் கொண்டிருந்தார்,

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கமலி சில்பாவை அருவாளால் தலையில் வெட்டி அவர் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்த சென்றனர். படுகாயம் அடைந்த கமலி கூச்சலித்ததில் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தாலி செயினை பருத்தி சென்ற நபர்களை சுற்றி வளைத்தனர்.

அவர்களிடமிருந்து, ஒருவர் தப்பிய நிலையில் மாங்கரை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரை கிராம மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும், கமலிசில்பாவின் தாலி செயினை மீட்டனர். மேலும், சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 215

    0

    0