தருமபுரி : வரதட்சணை கேட்டு முதல் மனைவியை அடித்து விரட்டி விட்டு விட்டு இரண்டாவது திருமணம் செய்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல் மனைவி புகார் அளித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் சோலை கொட்டாய் அருகே உள்ள ஜம்புகாலன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நிவேதா (வயது 24) பட்டதாரியான இவர் கம்பைநல்லூர் அருகே உள்ள குமாரம்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
விக்னேஷ் டெல்லி திகார் சிறையில் எட்டாவது பட்டாலியனில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருமணம் செய்யும் பொழுது எந்தவித எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை வரதட்சணை என்பது தேவையில்லை என்று ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் திருமணம் நடந்த பின்பு விக்னேஷ்சின் தாயார் என் மகன் காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார் என்பதால் 50 சவரன் நகை வரதட்சணையாக தரவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.
அதனையடுத்து வேறு வழியில்லாமல் நிவேதாவின் குடும்பத்தினர் நிவேதாவிற்கு 30 சவரன் மாப்பிள்ளை விக்னேஷ்க்கு 3 சவரன் நகையும் கொடுத்து ரூபாய் 50 ஆயிரம் கொடுத்துள்ளனர். மேலும் கார் வாங்கி கொடுக்க வேண்டும் என்றும், விக்னேஷ்சின் தாய் தந்தை மற்றும் தங்கை இவர்களின் பேச்சை கேட்டு அடிக்கடி பணம் கொடுக்க வேண்டும் என்று தொந்தரவு செய்ததோடு மட்டுமல்லாமல் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் நிவேதா மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதால் மருத்துமனைக்கு கொண்டு சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றியுள்ளனர்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் விக்னேஷ் மற்றும் அவர்கள் குடும்பத்தார் மீது இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் விக்னேஷ் காவலராக பணிபுரிந்து வருவதால் காவல் நிலையங்களில் பேசி முடித்து விடுவதாகக் கூறினார்.
இதனை தொடர்ந்து வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வருவதால் வேறு வழியின்றி வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி எனது கணவரின் குடும்பத்தார் சேர்ந்து எனது கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனால் தற்போது என்னுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாக உள்ளதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னை என் கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்களிடம் நிவேதா புகார் மனுவை அளித்துள்ளார்.
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
This website uses cookies.