காருக்குள் ரகசிய அறை… சோதனையில் நிறுத்தாமல் சென்ற கார் : துரத்தி பிடித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புதுச்சேரி குருடிக்காடு என்ற இடத்தில் கேரள போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த இன்னோவா காரை நிறுத்தினர்.ஆனால் கார் நிற்காமல் வேகமாக செல்லவே , அந்த காரை ஜீப்பில் விரட்டி சென்று போலீசார் மடக்கி பிடித்தனர்.
காரில் இருவர் இருந்த நிலையில் வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி காரில் இருக்கைக்கு கீழே ரகசிய அறை அமைத்து அதில் 1.90 கோடி ரூபாய் ஹவாலா பணம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.காரில் இருந்தவர்கள் கேரள மாநிலம், மலப்புரம் அங்காடிப்புரத்தை சேர்ந்த முகமதுகுட்டி மற்றும் புத்தனங்காடியை சேர்ந்த முகமதுநிசார் என்பது தெரியவந்தது.
கோவையில் இருந்து ஹவாலா பணத்தை மலப்புரம் பகுதியில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் , கோவையில் இருந்து ஹவாலா பணத்தை கொடுத்தவர், மலப்புரத்தில் பணத்தை பெறுபவர்கள் குறித்து பாலக்காடு மாவட்டம் கஸபா காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது : இன்று நடைபெற்ற மருதமலை…
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10…
This website uses cookies.