பாதுகாப்பில் குளறுபடி… திருவண்ணாமலை கோவிலில் முண்டியடித்த பக்தர்கள் : தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2023, 6:43 pm

பாதுகாப்பில் குளறுபடி… திருவண்ணாமலை கோவிலில் முண்டியடித்த பக்தர்கள் : தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று அதிகாலையில் சாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு உள்ளே செல்லும் வரிசையில் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

குறிப்பாக தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

மேலும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கூட்டமும் ஆயிரக்கணக்கில் அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.

இதனால் பல லட்சம் பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய அதிகாலை முதல் கோவிலில் குவிந்ததால் வரிசையில் செல்லும் வழியில் பக்தர்கள் இடையே மிகப் பெரிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வரிசை செல்ல பக்தர்கள் ஒருவரை ஒருவர் தள்ளி முண்டியடித்து கோவிலுக்குள் நுழைய முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தள்ளு முல்லை தடுக்க திருக்கோவில் பணியாளர்களோ காவல்துறையினர் அங்கு இல்லாததால் பக்தர்கள் கட்டுப்பாடு இன்றி வரிசையில் முண்டியடித்த சென்ற காட்சி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அண்ணாமலையார் திருக்கோவிலில் இந்து சமய துறை அதிகாரிகள் பக்தர்களுக்கு வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய முறையான ஏற்பாடுகளை மேற்கொள்ளாத காரணத்தினால் தான் இது போன்ற தள்ளுமுள்ளு ஏற்படுவதாக பக்தர்கள் வேதனையுடன் குற்றம் சாட்டி வருகின்றனர்.

  • producer lose his money because of suriya film எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?