வேட்பாளர் மீது குற்றப்பின்னணி இருக்கானு பார்த்து ஓட்டு போடுங்க : திமுகவினர் மத்தியில் துரை வைகோ பரப்புரை!
Author: Udayachandran RadhaKrishnan9 April 2024, 11:10 am
வேட்பாளர் மீது குற்றப்பின்னணி இருக்கானு பார்த்து ஓட்டு போடுங்க : திமுகவினர் மத்தியில் துரை வைகோ பரப்புரை!
இந்திய கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் மதிமுக கட்சியின் வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர் தீப்பட்டி சின்னத்திற்கு ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டை வாய்க்கால், சோம்பரசம்பேட்டை, அள்ளித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே வாக்கு சேகரித்தனர்.
அப்போது பேசிய வேட்பாளர் துரைவைகோ, எல்லா தேர்தல்களிலும் நல்லவர்களை தேர்ந்தெடுங்கள், தீயவர்களை புறக்கணியுங்கள் என்று தான் சொல்லி வருகிறேன்.
ஜாதி மதங்களைக் கடந்து நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் போது தொகுதிக்கு நல்ல திட்டங்கள் வரும் அடுத்த சந்திக்கும் நல்லது வரும் என்று அனைத்து இடங்களிலும் நன் சொல்லி வருகிறேன்.
நான் படித்திருக்கிறேனா, என் மேல் குற்ற வழக்கு இருக்கிறதா என்பதை பாருங்கள். வைகோ நல்லவர் தான், அவர் மகன் நல்லவரா தப்பு செய்திருக்கிறாரா, குற்றப்பின்னனி, வழக்குகள் இருக்கா என்று பாருங்கள் பார்த்துவிட்டு வாக்களியுங்கள்.
இதே போல் மற்ற வேட்பாளரையும் பாருங்கள். இந்த ஒரு அரசியல் கலாச்சாரம் நம்ம நாட்டில் வரவேண்டும்.
ஸ்ரீரங்கம் பகுதியில் தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி 20வருடங்களில் இல்லாத திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதே போல் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சிக்கு 3000 கோடிக்கு மேல் திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
என்னை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் திருச்சியின் எம்பி குரலாக ஸ்ரீரங்கம் பகுதியின் மக்களின் குரலாக ஒலிப்பேன். ஸ்ரீரங்கம் ஆலயத்திற்கு உலகில் இருந்து ஆயிரக்கணக்கனோர் தினமும் வந்து செல்கின்றனர். அதற்கான போக்குவரத்தை சீர்படுத்துவதற்கு நிதியை கொண்டு வருவேன், புதிய கட்டமைப்பை ஏற்படுத்துவேன்.
காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆற்றுகளில் செக் டேம் ஏற்படுத்தி தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழியை ஏற்படுத்துவேன்.
தமிழக முதல்வர் ஏழை குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார். ஒரு கோடிய 16லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கி வருகிறார்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மோடியை வீட்டுக்கு அனுப்பினால் கேஸ் விலை வெறும் 500 ரூபாய்க்கும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என பேசினார்.
பிரச்சாரத்தின் போது திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மற்றும் கூட்டணி உடன் சென்றனர்.