என்னையும் கூப்டாங்க தம்பி.. ஆனா திருமா.. சீமான் பரபரப்பு பேச்சு!
Author: Hariharasudhan7 December 2024, 2:13 pm
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவுக்கு தன்னையும் அழைத்ததாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்தனர்.
முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரையும் அழைத்து இருந்தனர். அம்பேத்கர் பற்றிய நூலை திருமாவளவன் வெளியிட்டு, நான் பெற்று இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். எனக்கு அம்பேத்கர் பற்றி பேச யாரும் மேடை அமைத்து தர வேண்டியதில்லை.

எல்லா நாளும் நான் பேசுவேன். தம்பி விஜய், அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடுவதை வரவேற்கிறேன். அம்பேத்கரை மக்கள் மத்தியில் யார் கொண்டு சேர்த்தாலும் மகிழ்ச்சி தான். ஒரு ஐபிஎஸ் அதிகாரி செய்கிற தவறால் ஆயிரக்கணக்கான ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கெட்டப் பெயர் உண்டாகிறது.
இதையும் படிங்க: மிரட்டலுக்கு எல்லாம் பாஜக பயப்படாது.. பூச்சாண்டி காட்டும் செந்தில் பாலாஜி!
ஒரு கட்சியை எதிர்த்து தொடர்ச்சியாக குரல் செய்தியை வெளியிடுவது, கைது செய்து செல்போனில் உள்ள குரல் செய்தியை எடுத்து, அதை ஒரு கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு கொடுத்து அதை வெளியிடுவது என ஒருவர் தொடர்ந்து செய்கிறார்.

அதை இந்த அதிகாரம் ரசிக்கிறது. ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோதும், அதற்கு முன்பும் இதுபோன்று நடந்து உள்ளதா? அதை எதிர்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்த விசிக தலைவர் திருமாவளவன், முதலில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட, தான் அதனைப் பெறுவதாக இருந்ததாகவும், அதன் பின்னர் ராகுல் காந்தி அழைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.