மாநில உரிமை பற்றிப் பேசும் தமிழக அரசால் சாதிவாரிக் கணக்கெடுக்க முடியவில்லை என நாதக சீமான் கூறியுள்ளார்.
மதுரை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுரை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது. மக்கள் எல்லாம் அச்சத்தில் உள்ளனர். சாராய போதையைத் தாண்டி, மாத்திரை, கஞ்சா சாக்லேட் உள்ளிட்டவைகள் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடங்கள் அருகே அதிகளவில் விற்கப்படுகிறது.
சாலையில் ஒருவரை வெட்டிச் சாய்க்க முடிகிறது. காவலரை எரித்துக் கொலை செய்ய முடிகிறது. இதுவரை கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. திமுக கொடி கட்டிய காரில் இருந்து இறங்கி வந்து பெண்கள் பயணித்த காரை வழிமறித்து குற்றம் செய்கின்றனர். 1,000 கோடி டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக அண்ணாமலை ஏன் போராடுகிறார்?
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக போராட்டம் நடத்தக்கூடாது. நாங்கள்தான் போராட வேண்டும். ரூ.450 கோடி கழிவறை ஊழல் குறித்து யாரும் இங்கு பேசவில்லை. திமுகவுக்கு திடீரென மொழி மீது பற்று வரும். சாதிவாரிக் கணக்கெடுக்க தயங்குகின்றனர்.
மத்திய அரசுக்குத்தான் அந்த அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்கள். பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. மாநில உரிமை பற்றிப் பேசும் தமிழக அரசால் சாதிவாரிக் கணக்கெடுக்க முடியவில்லை. முதலில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவில் டாஸ்மாக் ஊழல் நடந்ததாகக் கூறினர்.
இதையும் படிங்க: காத்திருந்த பலே சம்பவம்.. பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா சுட்டுப்பிடிப்பு!
பின்னர், ஒரு வாரத்தில் அது ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்தது. விசாரணை முடிவதற்குள் ஒன்றும் இல்லாமல்கூட ஆகிவிடும். தமிழகத்தில் உற்பத்தியாளரும், விற்பனையாளரும் ஒரே ஆளாக உள்ளனர்” எனத் தெரிவித்தார். முன்னதாக, ஆயிரம் கோடி ரூபாய் அளவில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
திருப்பூர் மாவட்டம் சாமலாபுரம் பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த விநாயகா பழனிச்சாமி இருந்து வருகிறார். இந்நிலையில் விநாயகா பழனிச்சாமி அப்பகுதியை…
பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கரின் வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்திற்கு சென்னை காவல் ஆணையர் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.…
31 வயது வித்தியாசம் – சல்மான் கானின் பதில் என்ன? பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மற்றும் தமிழ்,தெலுங்கு…
விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன். ஹெச் வினோத் இயக்கத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன்,…
சென்னையில், ரவுடிசத்தில் ஈடுபட்டு வந்த கணவரால் விரக்தி அடைந்த பெண் தலைமைக் காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை: சென்னை…
This website uses cookies.