அண்ணாமலையை குறைத்து மதிப்பிடக் கூடாது.. சீமான் சொன்ன சீக்ரெட்!

Author: Hariharasudhan
29 December 2024, 2:29 pm

அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிட முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

திருச்சி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (டிச.29) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “35 வருட கட்சியான பாமகவில் நேற்றைய பிரச்னை சரியாகிவிடும். வார்த்தை மோதல் குறித்து நான் கருத்துக் கூற முடியாது.

அன்புமணிக்கு கூட தலைவர் பதவியை நம்பிக்கையின் அடிப்படையில் தான் ராமதாஸ் வழங்கி இருப்பார். எதற்குமே நிதியில்லை எனக் கூறி வரும் திமுக அரசுக்கு, மகளிர் உரிமைத் தொகை வழங்க மட்டும் நிதி இருக்கிறதா? மழை நீர் செல்ல இடமில்லை, ஏதற்கு 62 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மெட்ரோ?

கமிஷன் வாங்குபவர்களைத் தேர்வு செய்து விட்டு, தலைவர்களைத் தேர்வு செய்யாமல் எப்படி அவர் மக்களுக்கு செலவு செய்வார்? அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் FIR மட்டும் எப்படி வெளியானது?

Seeman about Annamalai Protest against DMK Govt in Anna University sexual assault issue

இது வன்கொடுமையை விட மிகவும் கொடூரமானது. போலீசார் முறையாக செயல்பட்டிருந்தால் நீதிமன்றம் ஏன் கண்டிக்கப் போகின்றது? பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்பதை எப்படி நம்புவது?” என்றார்.

இதனையடுத்து, திமுக அரசைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான், “தனது கோபத்தை சாட்டையால் அடித்து வெளிப்படுத்திய அண்ணாமலையை நான் விமர்சிக்க முடியாது. அவரது கோபத்தை குறைத்து மதிப்பிட முடியாது.

இதையும் படிங்க: வாழப்பழத்த ஊட்ட முடியாது.. ரசிகர்களை சீண்டி பார்த்த பாலா!

எனக்குகூட தான் கோபம் இருக்கிறது. குற்றவாளியைத்தான் சாட்டையால் அடிக்க வேண்டுமே தவிர, நம்மை எதற்கு சாட்டையால் அடித்துக் கொள்ள வேண்டும். இதனைக் கேட்கும் போது கஷ்டமாக இருந்தது. அவருடைய உணர்வை அவர் வெளிப்படுத்தி உள்ளார். செருப்பு அணிய மாட்டேன் என்றெல்லாம் அண்ணாமலைக் கூறியதை ஏற்க முடியாது.

தம்பியிடம் (அண்ணாமலை) இந்தக் களத்தில் ஒரு அண்ணண் என்ற முறையில் நான் சொல்வது, இந்த நாட்டில் நிறைய மாறுதல்களைச் செய்ய வேண்டும். அதைத் தான், நான் அடிப்படை அரசியல் மாற்றம் என்று சொல்கிறேன்” எனத் தெரிவித்தார்.

  • Siragadikkai Aasai Vidhya Reveal the Truth about Leaked Video மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!