’நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?’ திடீரென ஆவேசமான சீமான்!

Author: Hariharasudhan
6 January 2025, 7:50 pm

புத்தக வெளியீட்டு விழாவில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என சீமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம்: நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில், ‘தமிழ்த்தேசியம்’ எனும் நூலை வெளியிட, சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது, புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதனையடுத்து, இதற்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்தன.

எனவே, இந்த விவகாரம் குறித்து நாதக சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என புத்தகக் கண்காட்சி நடத்தும் பபாசி தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று (ஜன.06) சேலத்தில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இது குறித்து பேசிய அவர், “பபாசி என்பது அரசு சார்ந்தது அல்ல, எங்கள் கட்சி நிகழ்ச்சிகளில் வேறு தமிழ்த்தாய் வாழ்த்து தான் பயன்படுத்துவோம்.

தமிழ்நாட்டில் எங்கு திராவிட நல் திருநாடு இருக்கிறது? தமிழ்த்தாய் வாழ்த்தில் 10க்கும் மேற்பட்ட வரிகளை நீங்கள் (திமுக) எடுத்துவிட்டீர்கள். நான் பாடலையே எடுத்துவிட்டேன். திராவிட நல் திருநாடு என்பது ஏன் இங்கு வருகிறது? திராவிடம் என்பது என்ன மொழி? தமிழ்த்தாய் வாழ்த்தில் சமஸ்கிருதச் சொல் வருகிறதா, இல்லையா?

Seeman about Governor RN Ravi walks out of TN assembly session

உங்கள் வசதிக்கு அதில் திராவிடம் என வந்ததும், அதனை தமிழ்த்தாய் வாழ்த்தாக ஆக்கிவிட்டீர்கள். நான் அதிகாரத்திற்கு வந்ததும், புரட்சிப் பாவலர் எழுதிய பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றுவேன். மேடையில் நான் இறங்கிய பிறகு ‘கலைஞர் கின்னஸ்’ என்னும் நூல் வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க: தலைக்கேறிய போதையில் தள்ளாடி வந்த பிரபல கிரிக்கெட் வீரர்…வேதனையில் ரசிகர்கள்..!

அதில், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். அதில் அவர்களும் அரசியல் தான் பேசினர். ஆனால், நான் பேசியது மட்டும் தான் இவர்களுக்கு பிரச்னை. நான் பேசி இந்த அளவுக்குக் கூட பிரச்னையாகவில்லை என்றால், நான் எதற்கு அரை நாள் செலவழித்துச் சென்று பேச வேண்டும்?

தமிழ்த்தேசியம் என்னும் புத்தக வெளியீட்டில், அதனை முன்னெடுக்கும் நான் தமிழ்த்தேசியத்தை பற்றித்தான் பேச முடியும். இப்படி நடக்கும் என்று தெரிந்து தான் அந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அனைவரும் அரசியல் தான் பேசுகின்றனர். ஆனால், அதில் நான் பேசியது தான் உங்களுக்கு பிரச்னையாக இருக்கிறது. மன்னிப்பு கேட்கிற ஆளா நான்? உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்து போட்டதற்கு நீங்கள் அனைவரும் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 56

    0

    0

    Leave a Reply