காவி உடையா? அப்போ நான் யார்? – அரசியல் யூகங்களுக்கு சீமான் பதில்!

Author: Hariharasudhan
28 November 2024, 11:13 am

திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால், நாம் அரசியலின் சூப்பர் ஸ்டார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நேற்று (நவ.27) நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து, கட்சிக் கொடியையும் அவர் ஏற்றினார்.

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய சீமான், “நான் இப்போதுதான் முதல்முறையாக நடிகர் ரஜினிகாந்தை தனியாகச் சந்தித்து இரண்டரை மணி நேரம் பேசினேன். நாங்கள் இருவரும் என்ன பேசினோம் என்பது யாருக்கும் தெரியாது. எங்களுடையச் சந்திப்பு பல பேருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அவரைச் சந்தித்த நான் சங்கி என்றால், அவரை வைத்து ஆண்டுக்கு 2 படங்களை எடுத்து பல கோடிகளை சம்பாதிப்பவர்களையும், தங்கள் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடு என அனைத்திலும் அவரை (ரஜினிகாந்த்) அழைத்து கொண்டாடியவர்களை என்ன சொல்வது?” எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால், நாம் அரசியலில் சூப்பர் ஸ்டார். நானும், என் படையும் இருக்கும் வரை பரந்தூரில் வின்னூர்தி நிலையமோ, தமிழ்நாட்டில் எட்டு வழிச் சாலையோ, காட்டுப்பள்ளியில் துறைமுகமோ ஒரு பொழுதும் அமைக்க முடியாது.

தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் மட்டுமே வேலை என்ற நிலையை நான் கொண்டு வருவேன். ஏனென்றால், தமிழ் என்பது எங்கள் கொள்கை மொழி, ஆங்கிலம் என்பது பயிற்சி மொழி. எனவே, நாங்கள் தமிழை வளர்ப்போம்” எனத் தெரிவித்தார். மேலும், தனது பேச்சின் இடையிடையே ஆங்கிலத்திலும் பேசினார் சீமான்.

Rajinikantb Seeman sangi issues

இதன்படி, What bro.. It’r Very wrong Bro.. I Hate it, காவி Not Fit For Myself.. It’s very bad; very ugly; I hate it என்றார். ஏற்கனவே தவெக தலைவர் விஜய், அக்கட்சியின் முதல் மாநில மாநாட்டில் ப்ரோ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதை, சீமான் அடுத்தடுத்த இடங்களில் சொல்லிக் காண்பித்தது மட்டுமல்லாமல், விஜய்க்கு எதிராகவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: கட்சியை ஆரம்பிக்கும் பிரபல நடிகர் : விஜய் கட்சியுடன் கூட்டணி போட முடிவு?!

மேலும், சமீபத்தில் ரஜினிகாந்தை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நேரில் சந்தித்து உரையாடினார். அப்போது காவி உடைக்கு சீமான் தயாராகி விட்டதாகவும், அதற்கான பேச்சுவார்த்தையை ரஜினிகாந்த் நடத்தினார் என்பது போன்றும் தகவல் வெளியான நிலையில், சீமான் அந்த அரசியல் யூகங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 145

    0

    0