காரில் பெட்டியொடு சுற்றுகிறேன்.. என்ன அது? சீமான் பரபரப்பு பேச்சு!

Author: Hariharasudhan
17 February 2025, 3:16 pm

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது என்பது திமுகவின் ஏமாற்று வேலை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக, தமிழ்நாட்டில் பல்வேறு காவல் நிலையங்களில் பெரியார் அமைப்பினர்கள் புகார் அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அந்த வகையில், ஈரோடு காவல் நிலையத்தில் பெரியார் அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஈரோடு போலீசார், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்திற்குச் சென்று சம்மன் வழங்கி இருந்தனர்.

இதனையடுத்து, சென்னை இல்லத்தில் சீமான் செய்தியாளர்களைச் சந்திதார். அப்போது பேசிய அவர், “எல்லா இடங்களிலும் வழக்கு போட்டு அலைய வைத்து மனச்சோர்வை உண்டாக்க வேண்டும் என அரசு நினைக்கிறது. இதற்குச் சோர்வடைகிற ஆளா என்று என்னைப் பார்க்க வேண்டும்.

Seeman about Periyar

இது நிறைய பார்த்தாச்சு, இதற்கெல்லாம் அச்சப்படுபவர்கள் இந்தக் களத்திற்கே வரக்கூடாது. எத்தனை வழக்குகள் வேண்டுமானலும் போடுங்கள், நாங்கள் எதிர்கொள்வோம். ஒரே காரணத்துக்காக போடப்பட்ட வழக்கு, ஒரே இடத்தில் வைத்து உயர் நீதிமன்றத்தில் அனுப்பி, ஒரே வழக்காக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து இருக்கிறோம்.

அதற்கு இடையில் இந்த அழைப்பபுகள் வந்து கொண்டிருக்கிறது. அதை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். நாளை ஒரு வழக்குக்காக விக்கிரவாண்டி செல்ல வேண்டும், சேலத்தில் வழக்கு என, ஒவ்வொன்றாக ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வழக்கு என்றால் ஒரே ஆள் தான் இருக்கிறேன்.

AI தொழில்நுட்பத்தில் நான்கு, ஐந்து உருவாக்கி அனுப்ப முடியாதல்லவா? ஒவ்வொன்றாகத் தான் செய்ய வேண்டும். என்னால்தான் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் தான் இப்படி செய்கின்றனர். யாரைப் பார்த்து யார் பயப்படுகிறார்கள்? என்னை பார்த்துதான் நீங்களும் பயப்படுகிறீர்கள்.

எனக்கு இது ஒன்றும் இல்லை, நீங்கள் எவ்வளவு நாளைக்கு பண்ணிட முடியும் எனவும், அதிகாரத்தில் இருப்பவர்கள் நிலையாக இருப்போம் என நினைப்பது சிரிப்பாக உள்ளது எனவும் கூறினார். நம்ம தான் எனவும் நினைத்துக் கொண்டு ள்ளனர். அந்த திமிரு இருக்கிறது அல்லவா, அந்த ஆட்டம் தான். அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வேன்.

மொழி பண்பாட்டுக் கலையை அழித்து, நிலத்தின் வளத்தைச் சுரண்டி முறையற்ற நேர்மையற்ற கேடுகெட்ட ஆட்சி முறையை உருவாக்கி, அபாயகரமான, அநாகரீகமான அரசியலை தாய் நிலத்தில் கட்டமைத்து திராவிட கோட்பாடு உள்ளது. அண்ணா வரைக்கும் சரியாக இருந்தது, என்றைக்கு கருணாநிதி நாற்காலியில் அமர்ந்தாரோ. அன்று இந்த வாடகை வாய்கள், வசவுகள் வருகிறது.

தனிப்பட்ட முறையில் ஏசுவது (திட்டுவது), அதிமுக ஆட்சியில் நடக்கவில்லை எனவும் இவர்கள் ஆட்சியின் போதுதான் ஏன் தமிழர் ஆட்சி என்று சொல்லாமல், திராவிட ஆட்சி என சொல்கிறீர்கள், விருதுகள் கொடுக்கும்போது கூட தகைசால் தமிழர் விருதுகள் கொடுக்கிறார்கள்.

துணிவு இருந்தால் தகைசால் திராவிட விருது என கொடுக்க வேண்டும். என் அடையாளங்களை அழித்து, ஆயிரக்கணக்கான முன்னோர்களின் ஆற்றல், புகழ், உழைப்பு, இயக்கம் என எல்லாவற்றையும் மறைத்து, பெரியார் பெரியார் என எல்லாவற்றையும் ஒற்றை குறியீட்டுக்குள் கொண்டு வருவது, மற்றவர்களெல்லாம் திராவிடப் போர்வைக்குள் கொண்டுவரப்பட்டார்கள்.

இந்த கொள்கையை சரி என ஏற்றுக்கொண்டார்கள் என் முன்னோர்கள். ஏன், நானே ஏற்றுக்கொண்டேன். அதன் பிறகு இவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல, துண்டாடப்பட வேண்டிய கொள்ளைக்காரன் என தெரிந்த பிறகு, எதிர்த்து சண்டை செய்ய வேண்டி இருக்கிறது.

புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பது என்பது ஏமாற்று வேலை. இல்லம் தேடிக் கல்வி புதிய கல்விக் கொள்கையில் உள்ளது. எல்லாவற்றையும் செயல்படுத்த இந்தியை எதிர்க்கிறேன் எனக் கூறிவிட்டு, இந்தியில் சுவரொட்டி ஓட்டுகிறார்கள். இந்தி பேசி வாக்கு சேகரிப்பது, அவர்கள் பள்ளிக்கூடத்தில் இந்தி இரண்டாவது மொழியாக உள்ளது.

எப்போது பார்த்தாலும் மதவாதத்தை எதிர்க்கிறோம், பாசிசத்தை எதிர்க்கிறோம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை, அதை ஏற்க முடியாது. அதற்குத்தான் இந்த கோட்பாட்டை எதிர்க்கும் போது பெரியார் பெரியார் என வரும்போது சண்டை போட வேண்டியிருக்கிறது.

அடிப்படை என்னவென்றால், நான் தமிழ் இனத்தின் மகன், தாய்மொழி எனக்கு தமிழ், என் மொழி எனக்கு முகம், முகவரி, அடையாளம், எனக்கு உயிர். மற்றவர்களுக்கு மொழி தொடர்பு கருவி. எங்களுக்கு உயிர் என் மொழி. மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல இயற்கையினால் உருவாக்கப்பட்டது.

நாட்டின் பிரதமரே உலகம் முழுவதும் சென்று பேசி வருகிறார். உலகம் மொழிகளில் முதன்மொழி எங்கள் நாட்டில் இருப்பது பெருமை எனவும், இந்திய மொழிகளில் தொன்மை தமிழில் இருந்து அடையாளம் காணலாம் என பிரதமர் பேசிக் கொண்டே வருகிறார்.

அந்த மொழியை அறிவியல் மொழி எனச் சொல்கிறீர்கள். நீங்களே 5,500 ஆண்டுக்கு முன்பு இரும்பை தமிழர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் எனக் கூறுகிறீர்கள். அது அறிவியலின் மொழி இல்லையா? விஞ்ஞானம், அறிவியல் வளர்ந்த போதும் கொரோனவிற்கு கபசுரம் குடிக்க வேண்டும், டெங்குக்கு நிலவேம்பு கொடுக்க வேண்டும் எனச் சொல்கிறீர்கள்.

எங்கள் மொழியை சனியன், காட்டுமிராண்டி, முட்டாள்களின் பாசை, நாங்கள் எல்லாம் முட்டாள்களா? உலகிற்கே கலை, அறிவியல், வேளாண்மை எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்த பேரினத்தின் மக்கள் முட்டாள்களா? எந்த இடத்தில் தமிழர்கள் பிராமணர்களின், பார்பானியத்தின் வப்பாட்டி மகன் என எழுதி இருக்கிறது.

எந்த சாசனத்தில் எழுதி இருக்கிறது? பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என சொன்னபோது அம்பேத்கர் தெளிவாக எழுதுகிறார். நாலு வர்ணத்தைத் தாண்டி கொடிய ஒரு வர்ணம் இருக்கிறது. பஞ்சமர் என்று சூத்திரன் இந்தியா முழுமைக்கும் நிலப்பரப்பில் 70 முதல் 80 விழுக்காடு சூத்திரன் உள்ளனர்.

கன்னடம், தெலுங்கு, மராட்டி, மலையாளத்தில் இருக்கிறார்கள். இதெல்லாம் இருக்கும் போது தாசி மகன், வேசி மகன், வப்பாட்டி மகன் என என்னை மட்டும் சிறப்பாக ஸ்பெசிபிக்கா மென்சன் ( Specific mention) பண்ண வேண்டிய தேவை என்ன? நீ யார் முதலில்? இத்தனை பேர் இருக்கும்போது தெலுங்கர், கன்னடர், மலையாளி, தெலுங்கர், மராட்டி, பீகாரி என எல்லாரும் வாழும்போது எங்கிருந்து வந்து, இங்கு உட்கார்ந்து கொண்டு என் மொழியை சனியன், முட்டாள்களின் மொழி, தமிழ் மொழி படித்தால் பிச்சை எடுக்க கூட லாயக்கில்லை, தெலுங்கில் எல்லாம் இருக்கிறதா? கர்நாடகாவில் எல்லாம் இருக்கிறதா? மலையாளத்தில் எல்லாம் இருக்கிறதா? கம்பனை யார் படிக்க வைத்தார்கள்?

என் தாத்தா காமராஜ் பல பேரை படிக்க வைத்தார். மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். பள்ளித் தாளாளர்களிடம் கையேந்தி நின்றார். கொடை கொடுங்கள் என்று பெரியார் கொடுத்த ஒரு நன்கொடையச் சொல்லுங்கள். காமராஜர், கொடையாளர்கள் பணம் கொடுத்தார்கள், அரிசி கொடுத்தார்கள், முடியாத தாய்மார்கள் சமைத்துக் கொடுத்தார்கள்.

மக்கள் இயக்கமாக மாற்றி பிள்ளைகளை படிக்க வைத்தார். ஆனால், பெரியார் கொடுத்த நன்கொடையை ஒன்று சொல்லுங்கள் பார்ப்போம். ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது, உயர்ந்தவன் தாழ்ந்தவன் இருக்கக்கூடாது என ஒரே மாதிரி சீருடை கொடுத்து படிக்க வைத்தார். நல்ல முயற்சி காமராஜர் செய்தது என பாராட்டி எழுதி இருக்கிறீர்களா?

இதையும் படிங்க: Old is Gold.. எஸ்கே நம்பிக்கை கைகொடுக்குமா? சிவகார்த்திகேயனும், பழைய டைட்டில்களும்!

நான் படிக்க வைத்தேன். நான்தான் படிக்க வைத்தேன், எங்கே படிக்க வைத்தீர்கள்? என்ன படிக்க வைத்தீர்கள்? நானும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். காரில் பெட்டியோடு தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன். என்னை எப்படி பெரிய தலைவனாக்கி முதலமைச்சர் நாற்காலையில் உட்கார வைக்கிறது எப்படி?

என் ஒருவன் உழைப்பு பத்தாது, எல்லோரும் சேர்ந்து உழைத்து தான் என்னை தூக்கிக்கொண்டு உட்கார வைப்பார்கள். எங்கள் தலைவனை அடையாளம் காட்டியது தமிழ் மக்கள் இல்லை. பத்து லட்சம் தலைக்கு விதித்து நாடு எங்கும் அவர் படத்தை போட்டு, இவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் பரிசு அறிவித்து, அந்த பிரபாகரன் பெயரை, அவரையும் நாடு முழுவதும் பரப்பியது இவர்தான். உங்கள் இனத்தின் தலைவன் என அடையாளத்தை காட்டியது எங்கள் இன எதிரி சிங்களம் தான்.

  • Raghava Lawrence helps பரிதவித்த சூப்பர் சிங்கர் போட்டியாளரின் அம்மா..ஓடி வந்த ‘ராகவா லாரன்ஸ்’..குவியும் பாராட்டு.!