தமிழகம்

என் தங்கச்சி எங்க போறாங்கனு தெரியும்.. நாதகவின் அடுத்த நகர்வு? சீமான் பதில்!

நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சேலம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பல போராட்டங்களை தனித்துதான் செய்து இருக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு குறித்த கருத்தை இப்பொழுதுதான் பேசுகிறார்கள்.

இந்தக் கருத்தை 2003ஆம் ஆண்டிலேயே அறிக்கை விட்டு, இந்தக் கருத்திற்கு எதிராகப் பேசி இருக்கிறேன். கட்சிகள், ஆட்சியின் கருத்தை நாங்கள் நம்பப் போவதில்லை. நீண்ட காலமாக நாங்கள் நம்பி, நம்பி ஏமாந்த கூட்டம் இது. அதனால் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம். நாங்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம், காளியம்மாள் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படும் தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான், “காளியம்மாள் எங்கே போகிறார் என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கச்சிக்கு வாழ்த்துக்கள்” என பதிலளித்தார்.

முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை செயலாளராக இருந்த காளியம்மாள், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து, நேற்று ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் நாதகவில் இருந்து விலகினார். அன்றுதான், சீமானும் ராணிப்பேட்டை செல்ல இருந்தார்.

ஏற்கனவே, சீமானின் கட்சியில் இருந்து மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவது கட்சியினுள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, ‘போனால் போகட்டும்’ என்ற சீமானின் பதிலும், கட்சியினர் மத்தியில் சற்று சலசலப்பை உண்டாக்கி, நாதகவின் போக்கை கவனிக்க வைத்துள்ளது.

இந்த நிலையில், இது குறித்து பிரபல நாளிதழிடம் பேசிய நாதகவி​ன் கொள்கை பரப்புச் செயலாளர் புதுகை ஜெயசீலன், “நாங்கள் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து தமிழ்​நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்கிறோம். இந்தப் புள்ளியில் நாங்கள் திராவிடம், தேசிய சித்தாந்தம் இரண்டுடனும் அடிப்​படையில் நாம் வேறுபடு​கிறோம். விஜயும் திராவிட பிதாமகரான பெரியாரை ஏற்றுக்​ கொண்​டுள்​ளார்.

இதையும் படிங்க: 25 ஆண்டுகளுக்கு பின் கம் பேக் கொடுக்கும் ஷாலினி…மீண்டும் அஜித்துடன் இணைகிறாரா.!

அதனால்தான் நாங்கள் விஜயை எதிர்க்கிறோம். இப்படி ஒரே நேரத்தில் திராவிடத்தையும், தேசியத்​தையும் எதிர்ப்​ப​தால், அனைவரையும் எதிர்ப்பது போன்ற தோற்றத்தை உருவாக்​கு​கின்றனர். எல்லா கட்சிகளில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் பிரிவது காலம் காலமாக நடப்பது​தான்.

அதுபோலவே நாதகவிலும் நடக்கிறது. வளரும் அரசியல் அமைப்பில் புதிய செயல்​திட்டங்களை அமல்படுத்​தும்போது சிலர் கருத்து முரண்​பாட்டால் விலகுவது தவிர்க்க முடியாதது. கட்சியை மறுசீரமைப்பு செய்யும்போது பலரிடம் பொறுப்பு பகிர்ந்​தளிக்கப்படு​கிறது. அப்போது சிலரின் அதிகாரம் குறைவதாக எண்ணி வருத்​தமடைந்து விலகு​கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

தாயுடன் உல்லாசம்… மகனின் கொடூர செயல் : தமிழகத்தை உலுக்கிய ஷாக் சம்பவம்!

தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…

56 minutes ago

மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

2 hours ago

பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…

14 hours ago

சூர்யா வீட்டில் திடீர் விசேஷம்…படையெடுத்த பிரபலங்கள்..குஷியில் ஜோதிகா.!

பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…

15 hours ago

தோனி சிக்ஸர் ரொம்ப முக்கியமா..கோட்டை விடும் CSK..முன்னாள் வீரர் காட்டம்.!

CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…

16 hours ago

இது தானா..எதிர்பார்த்த நாளும் இதுதானா..நடிகை திரிஷா போட்டோ வைரல்..ரசிகர்கள் வாழ்த்து.!

த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…

17 hours ago

This website uses cookies.