தமிழகம்

75 நிமிட விசாரணை.. 63 கேள்விகள்.. சீமான் கேட்ட ஒரே கேள்வி!

நடிகை அளித்த பாலியல் வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகினார்.

சென்னை: நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்​வ​தாகக் கூறி உடல் ரீதி​யாக​வும், மன ரீதி​யாக​வும் ஏமாற்றி​விட்டதாக சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி, சென்னை​ வளசர​வாக்கம் காவல் நிலை​யத்​தில் 2011ஆம் ஆண்டில் புகார் அளித்​தார்.

இதன் அடிப்படையில், சீமான் மீது பாலியல் துன்​புறுத்தல் உள்பட பல்வேறு பிரிவு​களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், இதனை ரத்து செய்​யக்​கோரி சீமான் சென்னை உயர் ​நீ​தி​மன்​றத்​தில் மனுத்தாக்கல் செய்​தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதி​மன்​றம், 12 வாரங்​களுக்​குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தர​விட்​டது.

இதனையடுத்து, முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்​பினர். ஆனால், அன்றைய நாள் நேரில் ஆஜராக முடி​யாது, 4 வாரகாலம் அவகாசம் வேண்​டும் என வழக்​கறிஞர் மூலம் சீமான் மனு அளித்தார்.

இதனையடுத்து, நேற்று (பிப்.28) காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக வேண்​டும் என 2வது முறையாக போலீ​சார் சம்மன் வழங்​கினர். குறிப்பாக, இந்த சம்மன் நீலாங்​கரையில் உள்ள சீமான் வீட்டு நுழைவா​யில் கதவில் ஒட்டப்​பட்​டது. ஆனால், அதை சீமானின் உதவி​யாளர் கிழித்​தார். இதனால், வீடு​பு​குந்து நீலாங்கரை போலீ​சார் அவரைக் கைது செய்ய முயன்​றனர்.

அப்போது, பாது​காவலருக்​கும் போலீ​சாருக்​கும் இடையே தள்ளு​முள்ளு ஏற்பட்​டது. தொடர்ந்து, சீமானின் பாது​காவலர், காவலாளி இருவரை​யும் நீலாங்கரை போலீ​சார் கைது செய்து இரவோடு, இரவாக சிறை​யில் அடைத்​தனர். இந்த நிலையில், நேற்று விசாரணைக்கு ஆஜராவதற்கு வடபழனி ஓட்டலில் தங்கியிருந்த சீமான், அங்கிருந்து புறப்பட்டு ஏவிஎம் ஸ்டுடியோ அருகில் சென்று கொண்டிருந்தார்.

தாமதமாக வரச்சொன்ன போலீஸ்: அப்போது, அவரைத் தொடர்​பு​ கொண்ட போலீ​சார் இரவு 9.15 மணியள​வில் வாருங்கள் எனத் தெரி​வித்​தனர். எனவே, ஏவிஎம் ஸ்டுடியோ அருகிலேயே காத்​திருந்​த சீமான், பின்னர் இரவு 9.15 மணியள​வில் புறப்​பட்டு நெரிசல் காரணமாக 10 மணியள​வில் காவல் நிலையம் சென்​றடைந்​தார்.

அப்போது, சீமானிடம் கேட்பதற்காக சுமார் 100 கேள்விகள் அடங்கிய பட்டியலை போலீசார் தயார் செய்து வைத்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக, விஜயலட்சுமிக்கும், உங்களுக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது, அவரை நீங்கள் மாலை மாற்றித் திருமணம் செய்தது உண்மையா, கருக்கலைப்பு செய்தது உண்மையா, புகாரை திரும்பப் பெற அழுத்தம் கொடுத்தீர்களா, பண உதவி செய்தீர்களா என்பன உட்பட பல்வேறு கேள்விகளை போலீசார் கேட்டுள்ளனர்.

அதற்கு சீமான் அளித்த பதில்களை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்துள்ளனர். மேலும், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இது சுமார் 75 நிமிடங்கள் நீடித்தது. இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “போலீஸ் விசாரணையில் சென்ற முறை கேட்ட அதே பழைய கேள்விகளையே இந்த முறையும் கேட்டனர். புதிய கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை.

விசாரணைக்கு தாமதமாக வர, காவல்துறையினரே காரணம். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். விசாரணைக்கு மீண்டும் தேவைப்பட்டால் ஆஜராகத் தயார். போலீஸ் விசாரணையில் என்னை நல்ல முறையிலே நடத்தினர்.

இந்த வழக்கை விசாரித்து முடிக்க மூன்று மாதம் கால அவகாசம் உள்ளது. மூன்றே நாளில் இதை விரைந்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? எனக்கு சம்மன் கிடைத்தபோது நான் பயணத்தில் உள்ளதாகத் தெரிவித்தேன். மீண்டும் கொடுத்த சம்மனை அடுத்து, போலீஸ் விசாரணைக்கு ஆஜரானேன்.

போலீஸ் தரப்புக்கு இந்த வழக்கில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆளும் திமுக அரசு இந்த வழக்கை நீட்டித்துக் கொண்டே செல்கிறது. என் வீட்டின் கதவில் ஒட்டப்பட்ட சம்மனை அகற்றியதில் எந்த தவறும் இல்லை. எங்கள் வீட்டில் இருந்த இருவரைக் கைது செய்ததும், அவர்களைத் தாக்கியதும்தான் தவறு.

சம்மனை ஒட்டியது வளசரவாக்கம் போலீஸ் அதிகாரிகள். அப்படி இருக்கும்போது நீலாங்கரை போலீசார் ஏன் எங்கள் வீட்டில் இருந்தவர்களைக் கைது செய்ய வேண்டும். கருணாநிதி என்னைக் கைது செய்து தலைவர் ஆக்கினார். இப்போது இவர்கள் என்னைக் கைது செய்து முதல்வராக்க உள்ளனர்.

இதையும் படிங்க: இதெல்லாம் மக்களுடன் ஒட்டவே ஒட்டாது… விஜய்யை ‘அது’ என ஒருமையில் பேசிய பிரபலம்..!

கடந்த தேர்தலில் தனித்து நின்று அடையாளம் பெற்றோம். எங்களுக்கு 36 லட்சம் வாக்குகள் கிடைத்தன. வாக்குக்கு பணம் கொடுக்காமல் இதைப் பெற்றுள்ளோம். என் மீதுள்ள நற்பெயரைச் சிதைக்கும் வகையில் அரசு இதனைச் செய்துள்ளது. புகார் அளித்த நடிகை கடந்த 15 ஆண்டுகளாக என்னை அவமானப்படுத்தி வருகிறார்.

விரும்பி வந்து அவர் உறவு வைத்துக்கொண்டார். எனக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. குழந்தைகள், குடும்பம் ஆகிவிட்டது. என் மீதான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டதா?அரசியல் களத்தில் நான் ஒரு பக்கமும், விஜய் ஒரு பக்கமும் உள்ளார். என்றைக்கும் அவர் எனது அன்புத் தம்பிதான். முதல்வர் அப்பா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

Hariharasudhan R

Recent Posts

ஐபிஎல் வரலாற்றில் அசாத்திய சாதனை.. 14 வயது வீரருக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்த அரசு!!

நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…

50 minutes ago

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

2 hours ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

2 hours ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

3 hours ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

3 hours ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

3 hours ago

This website uses cookies.