தவெக – அதிமுகவா? இது வேற.. புது ரூட் சொல்லும் சீமான்!

Author: Hariharasudhan
18 November 2024, 5:01 pm

மற்றவர்களைப் பற்றி எல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது என அதிமுக உடன் கூட்டணி தொடர்பான தவெக விளக்கத்துக்கு சீமான் பதிலளித்துள்ளார்.

திருச்சி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (நவ.18 திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுக உடன் தவெக கூட்டணி இல்லை என தவெக கட்சித் தலைமை சார்பில் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சீமான், “மற்றவர்களைப் பற்றி எல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது. நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம், அவ்வளவுதான். கூட்டணி என்பது தற்கொலைக்குச் சமமானது என்ற கோட்பாட்டைக் கொண்டவன் நான். அடுத்தவன் தோள் மீது ஏறி நின்று கொண்டு, நான் உயர்ந்தவன் என்பதை காட்டுவதைவிட, தனியாக நின்று உண்மையான உயரத்தைக் காட்டுவதே மேலானது என்னும் கோட்பாடு கொண்டவன் நான்” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களையோ, அமைச்சர்களையோச் சந்திக்க நேரம் ஒதுக்காத பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சரையும், விளையாட்டுத்துறை அமைச்சரையும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார்.

MK STALIN AND MODI UNDER ALLIANCE

எப்படியென்றால், காலையில் அப்பா சந்தித்தால் மாலையில் மகன் சந்திக்கிறார். திமுகவும், பாஜகவும் நேரடியான கூட்டணியில்தான் இருக்கின்றன. எனவே தான் அவர்களுக்கு (திமுக) ரெய்டு வராது. அதற்கு காரணம், அவர்கள் கறைபடியாத கரம் என்பதல்ல, கப்பம் சரியாகக் கட்டி கொண்டு இருக்கிறார்கள் என்று அர்த்தம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்த த.வெ.க…. மதுரையில் ஆட்டம் ஆரம்பம்!

முன்னதாக, சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88வது நினைவு தினத்தை ஒட்டி, திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  • Bala 25th anniversary celebration தூக்கிவிட்டவரை தூக்கி வீசிய விக்ரம்…இயக்குனர் பாலாவுடன் இப்படி ஒரு பகையா..!
  • Views: - 130

    0

    0