’இதுக்கு’தான் ஐபிஎஸ் ஆனாரா வருண்குமார்?.. சீமான் ஆவேசம்!

Author: Hariharasudhan
5 December 2024, 5:27 pm

உண்மையான தமிழ் தாய், தந்தைக்கு பிறந்திருந்தால் இப்படி அவர் (வருண்குமார் ஐபிஎஸ்) பேச மாட்டார் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வருண்குமார் ஐபிஎஸ் நீண்ட நாள்களாக என்னை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார். புதிதாக அவர் எதுவும் சொல்லவில்லை.‌

நாங்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 13 ஆண்டுகளாக கட்சி நடத்தி வருகிறோம். அது மட்டுமின்றி, தேர்தலில் நின்று கிட்டத்தட்ட 36 லட்சம் வாக்குகளைப் பெற்று, தமிழ்நாட்டின் மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக இருக்கிறோம். இவர் நாட்டை ஆள்கிறாரா? எதனை வைத்து பிரிவினைவாதிகள் என்று சொல்கிறார்?

Seeman on Varunkumar IPS controversial speech

அடிப்படை தகுதிகள் இல்லாமல் அவர் எப்படி ஐபிஎஸ் ஆனார்? தமிழ் – தமிழர் என்பது பிரிவினைவாதமா? உன் தாய்மொழி எது? உண்மையான தமிழ் தாய், தந்தைக்கு பிறந்திருந்தால் இப்படி அவர் பேச மாட்டார். உனக்கு மட்டும் தான் மனைவி, குழந்தை உள்ளதா? பேசும்போது பார்த்து பேச வேண்டும்.

அந்த மாநாட்டில் இவர் (வருண்குமார் ஐபிஎஸ்) பேசியது மட்டும் எப்படி வெளியே வருகிறது? இதுதான் உன்னுடைய வேலையா? என் கட்சியை குறை சொல்லத்தான் ஐபிஎஸ் ஆனாரா? காக்கி உடையில் இன்னும் எவ்வளவு காலம் இருக்க முடியும்? மோதுவது என்று முடிவாகிவிட்டது, மோதலாம்” என்றார்.

இதையும் படிங்க: விசாரணை என்ற பெயரில் நிர்வாணத் தாக்குதல்.. 2 கிட்னியும் செயலிழப்பு.. கோவையில் பரபரப்பு!

தொடர்ந்து தவெக தலைவர் விஜய் குறித்து பேசிய சீமான், “விஜய் மக்களுக்கு உதவ நினைப்பதை குறை சொல்ல முடியாது. எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருக்க நாங்கள் மன நோயாளி அல்ல. சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு. எந்தப் புயல் பாதிப்புக்கும் மத்திய அரசு உதவி செய்யவில்லை.

Seeman on TVK Vijay

மாநிலங்கள் தரும் வரியை எடுத்து வைத்துவிட்டு, பேரிடர் காலங்களில் கூட மத்திய அரசு உதவுவது இல்லை. இதைக் கேள்வி கேட்டால் ஆன்டி இந்தியன் என்கின்றனர்” எனக் கூறினார்.

முன்னதாக, சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎஸ் மாநாட்டில் பங்கேற்ற திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ், “நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம். நாம் தமிழர் கட்சியால் நானும், என்னுடைய குடும்பத்தினரும் இணையதளக் குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இணையக் குற்றம் செய்யும் கூலிகளைக் கண்காணிக்க 14 சி என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Siragadikkai Aasai Vidhya Reveal the Truth about Leaked Video மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!