சர்ச்சையில் சிக்கிய விஜய்க்கு ஆதரவுக்கரம் நீட்டிய சீமான்.. திமுகவின் தரம் இதுதான்!

Author: Hariharasudhan
4 December 2024, 2:42 pm

விஜய்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, அதனை நாம் பாராட்ட வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லாமல் தன்னுடைய அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோரை அழைத்து நிவாரண உதவிகள் வழங்கியது சர்ச்சையானது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சீமான், “விஜய்யால் களத்தில் நிற்க முடியாது. விஜய் களத்திற்குச் சென்றால் பிரச்னை வரும். அவர் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கச் சென்றால், அவரை பார்க்க பெரும் கூட்டமே கூடும், அதனால் பிரச்னை தான் வரும். பின்னர் அந்த பிரச்னையையும் சமாளிக்க வேண்டும்.

TVK Vijay gave relief assistance

விஜய்யால் கூட்டம் கூடி பிரச்னை வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என அதற்கு ஒரு விமர்சனம் வரும். விஜய்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, எனவே அதனை நாம் பாராட்ட வேண்டும். ஆனால், மற்றவர்கள் அதைக்கூடச் செய்யவில்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க: கஞ்சா வழக்கில் மன்சூர் அலிகான் மகன் அதிரடி கைது… தொடரும் கிடுக்குப்பிடி விசாரணை!

மேலும், புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும், அரசின் நடகவடிக்கைகள் அனைத்தும் மழைநீரில் ஆழமாக மூழ்கிவிட்டதாகவும் கடுமையாக சீமான் விமர்சித்தார்.

Seeman latest press meet

முன்னதாக, சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் ஃபெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோரை, பேருந்து அனுப்பி, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு வரவழைத்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை அதன் தலைவர் விஜய் வழங்கினார்.

இதனால் களத்திற்குச் செல்லாதவர் தலைவரா, எப்போது அவர் களத்திற்கு வருவார், விஜய்யின் இத்தகயைச் செயல் ஏற்புடையது அல்ல என்ற கருத்துகள் இணையத்தைச் சுற்றி வந்தன. மேலும், தவெக மாநாட்டிற்குப் பிறகு விஜயை கடுமையாக விமர்சித்து வந்த சீமான், விஜய் சர்ச்சை சுழலில் சிக்கிய நிலையில் சீமான் ஆதரவு தெரிவித்திருப்பது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 142

    0

    0